பெண்களின் மாதவிடாய் சிக்கல்களும் தீர்வுகளும் 

Published By: Nanthini

23 Nov, 2022 | 05:17 PM
image

ன்று பூப்படைந்த பெண்கள் முதற்கொண்டு திருமணமாகி குழந்தை பெற்ற அம்மாக்கள் வரை மாதவிடாய் தொடர்பான நோயினால் பீடிக்கப்பட்டு அல்லற்படுவதை காண்கிறோம். 

மாதவிடாய் தொடர்பான நோய்களாக ஒழுங்கற்ற மாதவிடாயே பிரதான இடத்தை வகிக்கின்றது. 

சராசரியாக பூப்படைந்த பெண்களுக்கு அடுத்த மாதவிடாய்க்கான நாட்களாக 28 நாட்கள் அமைவது இயற்கையானது. (சந்திர மாதத்தினையே கணக்கிட்டு 280 நாட்கள் (10 மாதங்கள்) குழந்தை வயிற்றில் வளரும் காலமாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது)

இந்த நாட்கள் தவறி, நாட்கள் பிந்தி, அடுத்த மாதவிடாய் வரும் அல்லது சில, பல நாட்கள் முந்தி வருவது ஒரு கர்ப்பம் தரிக்க ஆயத்தமாகும் பெண்ணுக்கு அனுகூலமாக அமையாது. 

இதற்கு காரணமாக அமைவது மாதந்தோறும் வெளியேறவேண்டிய குருதியானது, கர்ப்பப்பைச் சூட்டினால் உறைந்துவிடுவதேயாகும். இப்படியாக மாதாமாதம் வெளியேறவேண்டிய இரத்தமானது மென்மேலும் கர்ப்பப்பையில் படிவதால் நாளடைவில் கட்டியாக உருவாகி விபரீத நிலையினை உருவாக்கிவிடும். 

இதனால் வரும் துன்ப நிலைகள் பின்வருமாறு:

1) சிறு சிறு கட்டிகளாகவோ ஒரே கட்டியாகவோ கர்ப்பப்பையில் வளர்ச்சியுறுவதனால் கர்ப்பம் தங்குவதற்கு இடையூறாக அமையும். 

2) சிலவேளைகள் கர்ப்பம் தங்கி வளர்ச்சியுற்றாலும் சிசுவின் வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்திவிடும். 

3) கர்ப்பப்பை வாசல் வரை இக்கட்டிகள் வளர்ந்து அடைத்துக்கொள்வதால் மாதவிடாய் வரும் வேளையில் குருதியானது வெளியேற முயற்சித்து மிக குத்து வலிப்பு உண்டாகிப்போய் நோயாளிக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் வலி, வேதனை கூட ஏற்படலாம். 

4) மேலும் இன்றைய பெண் நோயினில் அடிப்படையாக 40 வயதுக்கு மேற்பட்ட 7%, 8% பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான புற்றுநோய் வருவதும் அவதானிக்கப்படுகிறது. 

அவையாவன... 

1) கர்ப்பப்பை புற்று எனவும் ஓவேரியன் சிற்ஸ் எனவும் 

2) கர்ப்பப்பை வாசல் புற்றெனவும் பெண்களுக்கு அடிவயிறு சார்ந்த புற்றுநோய்கள் எனவும் விரிவடைந்து காணப்படுகின்றன. 

இவர்களுக்கு ஏற்படும் கர்ப்ப ரோகம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் மாதவிலக்கு தொடர்பான குற்றங்களே ஆரம்ப நிலையாக காணப்படுகின்றன. மாதவிடாய் தொடர்பான ஒழுங்கீனங்களுக்கு பொருத்தமான சிகிச்சை மூலம் மாதவிடாய் ஒழுங்காக ஏற்படுத்திக்கொண்டால் அநேகமான கர்ப்பப்பை தொடர்பான நோய்களிலிருந்து விடுபடலாம். 

சிகிச்சை முறை (சித்தர்வழி மருத்துவம்) 

மாதவிடாயின்போது குத்து, வலி வேதனை உடையவர்களுக்கு! 

மாதவிடாய் குணங்குறி கண்ட பின் 

* காலை – மாலை பெரிய சிவப்பு மாத்திரை (உணவின் முன் 2)

* மகாவிஷ்ணுசக்கர மாத்திரை (உணவின் பின் 2)

மேற்படி மருந்துகளை வலி, வேதனை உள்ள பெண்கள் மாதத்தில் இரண்டு முறை பாவித்துவரின் முழுமையான வலி, வேதனைக்குரிய காரணிகள் அகற்றப்பட்டு இரத்தம் வெளியேறுவதுடன் கர்ப்பப்பையின் உட்சுவரில் படிந்திருக்கும் உறைந்த இரத்தக் கட்டிகள் பூரணமாக வெளியேறி ஆனந்த சுகமடைவர். 

மேலும் Ovarian Cyst காணப்படுவோர் கர்ப்பப்பையில், அடிவயிற்றில் கட்டிகள் காணப்படுவோர் மேற்கூறிய மருந்துடன் அமுதசுரபி 7 எனும் மருந்தினை தொடர்ந்து 48 நாட்கள் பாவித்து வர, கல் போல திரண்டு வளர்ந்த கட்டிகளும் ஊளைச்சதை வளர்ச்சியும் நீங்கி பூரண சுகமடைவர். 

மேற்படி நோய் கண்டவர்கள் நோயுடன் திருமணம் செய்து மிகவும் சிரமப்பட்டு கர்ப்பத்தை உருவாக்கிப் பிறக்கும் குழந்தை கூட எதிர்காலத்தில் தாய் எதிர்கொண்ட நோயின் தாக்கத்தை குழந்தையும் அனுபவிக்க வேண்டிவரும். 

இப்படி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து நோய் காணப்படுமானால், படிப்படியாக பெறும் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டவர்களாக குழந்தை பெறும் தகுதியற்றவர்களாகி அவர்கள் தலைமுறை விலகிப் போகும் நிலையும் ஏற்படலாம். 

ஆகவே, மாதவிடாய் தொடர்பான நோயில் பெண்கள் மிகவும் அவதானமாக இருந்து பூரண குணமளிக்கும் சிகிச்சையை பெற்று வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்பார்களாக!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்