புத்தளம் பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் கணினிகள் கையளிப்பு

Published By: Nanthini

23 Nov, 2022 | 05:18 PM
image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி புத்தளத்தில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளுக்கு கணினிகளை பரிசளித்ததோடு, அப்பிரதேசத்தின் தகுதியான பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கிவைத்ததன் பிறகு வட மாகாணத்துக்கான தனது முதல் விஜயத்தை ஆரம்பித்தார்.

இந்த அன்பளிப்பானது நட்பு அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான பாகிஸ்தான் அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பாகிஸ்தானும் இலங்கையும் முறையே 1947 மற்றும் 1948இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து நீண்ட காலமாக கலாசார இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வரலாற்றை பகிர்ந்துகொள்ளும் இரு நாடுகளாகும்.

இவ்விஜயத்தின்போது வணக்கத்துக்குரிய அட்டமஸ்தானாதிபதி மிரிசவெட்டிய ஸ்தூபி பிரதம தேரர் எத்தலேவடுனவேவே ஞானதிலக தேரர், ஸ்ரீ மஹா போதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர், அநுராதபுர அபயகிரிய விகாரை பிரதம தேரர் கல்லஞ்சியே ரத்தனசிறி தேரர் ஆகியோரை சந்தித்ததோடு, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த முக்கியத்துவம் மற்றும் நீண்டகால உறவை உயர்ஸ்தானிகர் விளக்கப்படுத்தினார்.

மேலும், அநுராதபுரத்தின் வணக்கத்துக்குரிய பிரதம பிக்குகள் மற்றும் ரஜமஹா விகாரை மிஹிந்தலை பிரதம தேரர் கலாநிதி தம்மரத்தன தேரர் ஆகியோர் உயர்ஸ்தானிகரை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன், எப்போதும் இலங்கைக்கு உதவும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் பாராட்டினர்.

அத்துடன் உயர்ஸ்தானிகர் மற்றும் அனுராதபுர, மிஹிந்தலையின் வணக்கத்துக்குரிய பிரதம தேரர்களுக்கு இடையில் கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத்தின் மூலம் இலங்கை இளைஞர்கள் மற்றும் மக்களின் நலனுக்கான ஒத்துழைப்புத் திட்டங்களை மையமாகக் கொண்ட பரஸ்பர இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59