மீன் மாங்காய் குழம்பு

Published By: Ponmalar

23 Nov, 2022 | 04:21 PM
image

தேவையான பொருட்கள்: 

மீன் - 1/2 கிலோ

மாங்காய் – 1

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்

மல்லிதூள்- 1 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

புளி - அரைநெல்லி அளவு

தேங்காய்ப்பால் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

மீனை நன்றாக சுத்தம் செய்த பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்ததும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். 

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி மிளகாய்தூள், மல்லிதூள் சேர்த்து சிறுதீயில் வைக்கவும். 

சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீனையும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும். 

கெட்டியாக கரைத்த புளி தண்ணீர் சேர்க்கவும். 

சிறுதீயில் வைத்து மீன் வெந்து எண்ணெய் பிரியவும் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லிதழை தூவி இறக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்