யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த 21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்குமிடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
சம்பவத்தின் போது சிரேஷ்ட மாணவர்களால் புதுமுக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பல்கலைக்கழக நடைமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்ற ஆரம்ப கட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட மூன்று சிரேஷ்ட மாணவர்களுக்கும், ஒரு புது முக மாணவனுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், சுதந்திரமான விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களையும் மறுஅறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளினுள்ளும் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதுடன், கல்வி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM