ஆடாதோடை

Published By: Ponmalar

23 Nov, 2022 | 04:05 PM
image

நெஞ்சில் சளி, அதனுடன் வலி உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றுக்கு ஆடாதொடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி  ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.

சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம் பெறும். இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள  தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடாதோடைக்கு உண்டு.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், சளி, இருமல், இரைப்பு, நீங்கும். 

நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல் தொண்டைக்கட்டு போன்றவையும் நீங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்