கழுத்து கருமை நீங்க…

Published By: Ponmalar

23 Nov, 2022 | 03:48 PM
image

சிலருக்கு முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆனால், கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையாகக் காணப்படும். இது முகத்தின் அழகையே கெடுக்கும் விதத்தில் இருக்கும்.

என்னதான் தேய்த்துக் குளித்தாலும் இந்த கருமை போகவில்லை என்று வருத்தப்படுவோர் அதிகம். 

ஆனால், கழுத்தில் உள்ள கருமையைப் போக்க இயற்கையாகவே சில வழிகள் உள்ளன.

அந்தவகையில், கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்குவதற்கு சிறந்த தீர்வு எலுமிச்சை சாறு. குளிப்பதற்கு முன்பாக சிறிதளவு எலுமிச்சைச் சாறு துளிகளை கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்யலாம். 

அதுபோல பாசிப்பயறு மா கருமையைப் போக்கி சருமம் பளபளப்பு அடைய வைக்கும் சிறந்த பொருள். பாசிப்பயறு மாவை குளிக்கும்போது தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கும். 

அதுபோல, ஓட்ஸுடன் சிறிது தயிர் சேர்த்து பெக் போன்று கழுத்துப் பகுதியில் போட்டு வரவும். இதுவும்  சிறந்த தீர்வாக இருக்கும். 

உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு பேஸ்டையும் பயன்படுத்தலாம். 

தக்காளியை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சிறிது சீனி சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம். 

இயற்கையான பொருள்கள் என்பதால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததால் இதனை முயற்சிக்கலாமே!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெக்சிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

2023-03-24 13:48:39
news-image

சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மொய்ஸ்சுரைசர்

2023-03-17 14:59:33
news-image

எந்த காலமானாலும் சரி எந்த யுகமானாலும்...

2023-03-01 14:36:43
news-image

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்

2023-02-10 13:04:52
news-image

உங்கள் சருமத்துக்கேற்ற பவுண்டேஷனை தெரிவு செய்யும்...

2023-02-03 17:21:13
news-image

'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

2023-02-02 17:21:04
news-image

இளம் பெண்கள் ஏன் தாவணி அணிய...

2023-02-01 16:08:50
news-image

பெண்களுக்கு வாதத்தால் வரும் மார்பக வலி

2023-01-28 12:07:36
news-image

முக சுருக்கங்களை நீக்கும் ஃபேஸ் பெக்!

2023-01-27 16:04:55
news-image

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்

2023-01-26 17:25:55
news-image

சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி?

2023-01-26 12:40:30
news-image

மாதாந்திர வலி

2023-01-25 17:23:18