திருமண வாழ்வில் பிரச்சினையில்லை!

Published By: Ponmalar

23 Nov, 2022 | 03:47 PM
image

கேள்வி
எனக்கு வயது 17. நான் உயர்தரத்தில் கல்வி கற்று வருகிறேன். எனது பிறப்புறுப்பின் இருபுறமும் சதைபோல் தொங்குகிறது. எனக்கு ஏதும் நோயா என்று தெரியவில்லை. இன்னும் ஓரிரு வருடங்களில் எனக்குத் திருமணம் செய்து வைக்கவுள்ளதாக என் மாமி சொல்கிறார். இதற்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா? அல்லது திருமண வாழ்க்கை எனக்கு கிடைக்காமல் போய்விடுமா?

பதில்
இதை, ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலமே சரிப்படுத்த முடியும். சரும நோய்களுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒருவரை அணுகி அவரது ஆலோசனைப்படி அந்த சிகிச்சையைச் செய்துகொள்ள முடியும்.

அதேவேளை, இதனால் உடல் ரீதியாக எந்தவொரு பிரச்சினையும் வராது. முக்கியமாக, திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இல்லை. நீங்கள் அதைக் குறித்துத்தான் கேட்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்