மண்முனை தென்எருவில்பற்று பிரதேச கலாசார, இலக்கிய விழாவும் “எழுவான்” சிறப்பு மலர் வெளியீடு

Published By: Vishnu

23 Nov, 2022 | 06:44 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கலாசார, இலக்கிய விழாவும் “எழுவான்” சிறப்பு மலர் வெளியீடும் மிகவும் பிரமண்டமான முறையில் கோலாகலமாக 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை(22) மாலை களுதாவளையில் நடைபெற்றது.

கலை கலாசாரங்களையும், இலக்கியத்தையும் பிரதிபலிக்கும் முகமாக களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் முன்னாலிருந்து களுதாவளை கலாசார மண்டபம் வரையில் ஆடல் பாடல், மேள தாள வாத்தியங்கள் முழங்க பண்பாட்டுப் பவனி ஊர்வலமாக சென்றடைந்தது.

பின்னர் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நாடகம், பாடல், கும்மி, வில்லுப்பாட்டு, உள்ளிட்ட பல்வேறு அரங்க நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.

தொடர்ந்து இதன்போது பிரதேச இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலஞர்களின் ஆக்கங்களைக் கொண்ட “எழுவான்” எனும் சிறப்பு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கலைக்காகவும், இலக்கியத்திற்காகவும், ஆற்றிவரும் கலைஞர்களும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், இதற்போது கௌரவிப்புக்களும், விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது மதத் தலைவர்கள், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி  விபுலனந்த அழகியற்  கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எப்.பாரதி கென்னடி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளர்களான போராசிரியர் வ.இன்பமோகன், கலாநிதி.சு.சிவரெத்தினம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர் க.பாஸ்கரன், எழுத்தாளர் உமா.வரதராஜன், மற்றும், ஏனைய அதிகாரிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், அதிபர்கள், ஆசீரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இhன்போது கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32