சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு

Published By: Ponmalar

02 Dec, 2016 | 04:55 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

நாட்டில் அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. 

குறித்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். 

அச்சந்திப்பின்போது நாட்டில் செயற்படும் அடிப்படைவாதக் குழுக்கள் தொடர்பிலும் அதனால் சமுகங்கள் மத்தியில் ஏற்படும் சிக்கல் நிலை சம்பந்தமாகவும் ஆராயப்படவுள்ளன. மேலும்  இச்சந்திப்பில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு சில தரப்பு பிரயத்தனம் மேற்கொள்வதாக அண்மையில் பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. ஆகவே அவ்வாறான நடவடிக்கையின் பின்னால் உள்ள சக்திகள் பற்றியும் குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38