ஈழத்து இளம் படைப்பாளி கதிரின் இயக்கத்தில் 'Blink' குறும்படத்தின் டீசர் வெளியீடு

By Nanthini

23 Nov, 2022 | 02:44 PM
image

ழத்து தமிழ் சினிமாவின் புதிய பரிணாமத்தில் பல்வேறு படைப்புகள் உருவாகி வருகின்றன. 

அந்த வகையில் இளம் படைப்பாளி கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள 'Blink' தமிழ் குறும்படத்தின் டீசர், கடந்த 19ஆம் திகதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான Gum Leaf Entertainmentஇன் யூடியூப் வலைத்தள பக்கத்தில் வெளியாகியிருந்தது.

படத்தின் உதவி இயக்குநராக நல்லையா கஜீபன், ரினோஷா, வஜிவரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

திஷான் ஆனந்த், இதயராஜ், சமீரா, நியூட்டன், வனிவரன், ஆர்.கே., கோகுல், பிரசாந்த், மிதுஷன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். 

சித்தார்த் கெமல் கெமரா உதவியாளராகவும், அருண் குமாரசாமி இசையமைப்பாளராகவும், சுவிகரன் தயாரிப்பு முகாமையாளராகவும், ஜெனிஸ்டன் நாக டேரியன் டேரிஸ் கலை இயக்குநராகவும், வாகீசன் ஆனந்த், டேரியன் சண்டைக் காட்சிகளின் இயக்குநர் - சிறப்பு ஒப்பனையாளராகவும், சிபோஜன் மக்கள் தொடர்பாளராகவும், அகல் ஒப்பனையாளராகவும் பணியாற்றியுள்ளனர். 

படத்தின் டீசர் கொட்டும் மழைப் பின்னணியில் அக்ஷன், அதிரடி காட்சிகளை கொண்டதாக அமைந்திருப்பது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. 

இக்குறும்படம் விரைவில் வலைத்தள பக்கங்களில் வலம் வரவுள்ளது... கண்டுகளியுங்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்