(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
அரசாங்கம் பல்வேறு திருத்தங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பாரிய வெடிப்பொன்று நாட்டுக்குள் ஏற்படும்.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் அதில் நாங்களும் கலந்துகொள்வோ என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தா
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரவு -செலவுத் திட்ட உரையில் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. என்றாலும் லாபத்தில் இயங்கிவரும் நிறுவனங்களை மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வரும்போது அரச நிறுவனங்களை விற்பனை செய்வதில்லை எனவும் நாங்கள் விற்பனை செய்ததை மீள பெற்றுக்கொள்வதாகவே மக்களுக்கு தெரிவித்திருந்தனர். அப்படி இருக்கையில் எவ்வாறு அரச நிறுவனங்களை விற்பனை செய்ய முடியும். அதற்கு மக்கள் ஆணை இல்லை.
அத்துடன், தேர்தல் என்பது அரசாங்கத்துக்கு தவறுகளை திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகும். இந்தியாவில் பிரதமர் மோடி கொவிட் உச்ச சந்தர்ப்பத்தில் பிராந்திய தேர்தலை நடத்தினார். அதன் விளைவாக 5 பிராந்தியத்திலும் பிரதமர் மோடி தோல்வியடைந்தார்.
பின்னர் தனது தவறை உணர்நது, கொவிட் தொற்றை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடத்தினார். அதில் அந்த பிராந்தியங்கள் அனைத்தையும் வெற்றிகொண்டார். அதனால் தேர்தல் மறுசீரமைப்பு நடவடிக்கையை காரணம் காட்டி தேர்தலை பிற்போடக்கூடாது என தெரிவிக்கின்றோம்.
மறுசீரமைப்பு நடவடிக்கை 10வருடங்களாக பிரதமர் தினேஷ் தலைமையில் இடம்பெறுகின்றது. இன்னும் நிறைவடையவில்லை. அதனால் தேர்தலை பிற்போட முயற்சிக்கவேண்டாம் அது தேசிய ரீதியில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு செயற்பட்டால் நாட்டில் பாரியதொரு வெடிப்பு ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் அதில் நாங்களும் கலந்துகொள்வோம்.
அத்துடன் பாராளுமன்ற பிரேரணை ஒன்றின் மூலம் தேர்தலை பிற்போட முடியாது. உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுழுவுக்கு இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM