‘சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்படம்’ வெளியீடு

Published By: Ponmalar

23 Nov, 2022 | 02:29 PM
image

சமூகத்தின் பிரச்சினைகளையும், கூடாத பழக்கங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்து சமூக மாற்றத்தை நோக்கி சாய்ந்தமருது கலைஞர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள ‘சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்படம்’ எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை  மாலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில் திரையிடப்படவுள்ளது.

இளம் இயக்குனர் எல்.எம். சாஜித் இயக்கத்தில் டொப் குயின் அட்வர்டைசிங் நிறுவன தயாரிப்பில் பிரபல கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் பிரதான நடிப்பில் வெளிவரவுள்ள இந்த நாடகங்கள் முதல் தொழுகை, பணத்திமிரு, பெண்தேவதை, குடிபோதை, வட்டியின் வினை போன்ற சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு திரையிடப்படவுள்ளது. இந்த நாடகங்களில் பிரபல  கலைஞர்களான எம். எச். எம். அலிரஜாய், ஐ. ஜாபீர், இபாஸ் ஹஸ்னி, சுல்பிகா செரீப், எம். ஐ. எம். அக்ரம், ஏ. ஆதம்பாபா, ஜே. முஸ்னத் அஹமட், பாத்திமா அன்ஹா, என். எம். அலிகான், எம். அல்தாப்  போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மருதம் கலைக்கூடல் மன்றம் மற்றும் தெரு பசங்க தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் இணைத்தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த சமூக விழிப்புணர்வு குறுந்திரைப்பட வெளியீட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக், கிழக்கு மாகாண கலாச்சார உத்தியோகத்தர் ஏ. எல். எம். தௌபீக், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஆர். எம். ரிம்ஸான், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ. எச். சபிக்கா, யுகே. எம். ரிம்ஸான், அமானா நற்பணிமன்ற தலைவர் ஏ. எல். ஏ. பரீட், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.அஸாம் உட்பட கலைஞர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கான...

2023-12-01 07:36:02
news-image

43 ஆவது தேசிய இளைஞர் விருது...

2023-11-30 15:41:31
news-image

'யாழில் மலையகத்தை உணர்வோம்' : முதல்...

2023-11-30 13:37:28
news-image

59ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் திருமறைக்...

2023-11-30 13:48:41
news-image

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில்...

2023-11-30 12:19:31
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2023-11-30 11:52:12
news-image

'மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்' :...

2023-11-30 11:23:08
news-image

மலையகம் 200 : "யாழில் மலையகத்தை...

2023-11-30 10:38:00
news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58
news-image

43 ஆவது தேசிய இளைஞர்கள் விருதுகள்...

2023-11-29 16:36:38