சப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவுத் திட்டம் ஆளும் கட்சி (ஐ.ம.சு.மு), எதிர்கட்சி (ஐ.தே.க), இ.தொ.கா ஆகிய மூன்று கட்சிகளின் ஆரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் கஞ்சன ஜயரத்ன தலையில்  மாகாண சபை கட்டிடத்தொகுதில் இடம்பெற்ற சப்ரகமுவ மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக இறுதி வாக்கெடுப்பு, இ.தொ.காவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியின் 28 உறுப்பினர்களின் ஆதரவுடனும், எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களின் பூரண ஆரவுடனும்  நிறைவேறியது.  

சப்ரகமுவ மாகாண சபையில் வரவு செலவு திட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மூன்று தினங்களாக (29, 30, 1) நேற்று வரை சப்ரகமுவ மாகாண சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் இரண்டாம், மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றது. 

இதனை தொடர்ந்து நேற்று(01) மாலை இடம்பெற்ற சப்ரகமுவ மாகாண சபையின் பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பின் போது இ.தொ.காவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 28 உறுப்பினர்களின் ஆதரவுடனும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களின் ஆரவுடனும் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேறியது.