உலக கிண்ணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒன்லவ் கைப்பட்டி

Published By: Rajeeban

23 Nov, 2022 | 02:59 PM
image

ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமான விடயமாக காணப்படும் கட்டாரில் எல்ஜிபிடிகியு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக ஒன்லவ் வானவில் கைப்பட்டிகளை அணியவிருந்த ஐரோப்பாவின் ஏழு கால்பந்தாட்ட அணிகள் பீபாவின் எதிர்ப்பு காரணமாக அதனை கைவிட்டுள்ளன.

பீபாவின் எதிர்ப்பை தொடர்ந்து தாங்கள் அந்த கைப்பட்டியை அணியப்போவதில்லை என ஏழு அணிகளும் தெரிவித்துள்ளன.

திங்கட்கிழமை இங்கிலாந்து வேல்ஸின் கால்பந்தாட்ட பிரதான அமைப்புகள் இது குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன.

பீபாவின் தடை அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பரில் தாங்கள் அறிவித்த ஒன்லவ் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளதாக இந்த நாடுகளின் கால்பந்தாட்ட தலைமை அமைப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே நெதர்லாந்து சுவிட்சர்லாந்து ஜேர்மனி பெல்ஜியம் டென்மார்க் ஆகிய நாடுகள் இது தொடர்பில் தங்கள் முடிவை அறிவித்துள்ளன.

தேசிய சம்மேளனங்கள் என்ற அடிப்படையில் எங்கள் வீரர்கள் தடைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுவதை அனுமதிக்க இயலாது இதன் காரணமாக கால்பந்தாட்ட உலககிண்ண போட்டிகளின் போது ஒன்லவ் கைப்பட்டியை அணியவேண்டாம் என நாங்கள் எங்கள் அணிகளை கேட்டுக்கொண்டுள்ளோம் என அவர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள்; ஆடைகள் போன்றவை குறித்த  விதிமுறைகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார் ஆனால் வீரர்கள் யெலோகார்ட்டினை எதிர்கொள்ளும் அல்லது ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

பீபாவின் தீர்மானம் குறித்து அணிகள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனஇஇது முன்னர் ஒருபோதும் இல்லாத நடவடிக்கை எல்ஜிபிடி சமூகத்தினரிற்கு நாங்கள் வேறு விதத்தில் ஆதரவை வெளிப்படுத்துவோம் எனவும் இந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

ஜேர்மனி போர்க்கொடி

இதேவேளை இந்த கைப்பட்டி விவகாரம் தொடர்பில் பீபாவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக ஜேர்மனியின் கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பீபாவின் எதிர்ப்பினால் தனது வீரர்கள் குறிப்பிட்ட கைப்பட்டியை அணிவதை ஜேர்மனி தடை செய்துள்ளதை தொடர்ந்து ஜேர்மனியின் பாரிய பல்பொருள் அங்காடி ஜேர்மனியின் கால்பந்தாட்ட சம்மேளனத்துடனான உறவை துண்டித்துள்ள நிலையிலேயே ஜேர்மனி பீபாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.

குறிப்பிட்ட கைப்பட்டியை அணியும் அணித்தலைவர்களிற்கு எதிராக யெலோ கார்ட் பயன்படுத்தப்படலாம் என பீபா எச்சரித்துள்ளதை தொடர்ந்து தனது வீரர்கள் இந்த கைப்பட்டியை அணிவதற்கு டீஎவ்பி அனுமதி மறுத்துள்ளது.

எனினும் ஜேர்மனியின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இந்த முடிவிற்கு அந்த நாட்டின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியான செயின் ரெவே கடும் எதிர்ப்பை கால்பந்தாட்ட சம்மேளனத்துடனான தனது தொடர்புகளை துண்டித்துள்ளது.

ஜேர்மனியின் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பரங்களை நிறுத்தப்போவதாக செயின் ரெவே குறிப்பிட்டுள்ளது.

கட்டாரின் தீவிர நடவடிக்கைகள்

ஒன்லவ் கைப்பட்டியை பயன்படுத்துவதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் கட்டாரும் ஈடுபட்டுள்ளது

டோஹாவில் திங்கட்கிழமை பத்திரிகையாளர் ஒருவரை அவரது ஒன்லவ் கைப்பட்டியை அகற்றுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

டென்மார்க்கின் டிவி2 ஸ்போட்டை சேர்ந்த  பத்திரிகையாளர் ஒருவர் தனது அணியை வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்தவேளை அவரை நோக்கி சென்ற கட்டார் காவல்துறையை சேர்ந்த ஒருவர் ஒன்லவ் கைப்பட்டியை அகற்றவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

எனினும் ஜோன் பக் என்ற அந்த பத்திரிகையாளர் அதனை அகற்ற மறுத்துள்ளார்.

கருத்து தெரிவிப்பதற்கான உங்கள் உரிமையை நான் மதிக்கின்றேன் ஆனால்  என்னால் அதனை அகற்ற முடியாது அதில் உள்ள நிறங்களிற்காகவா என்னை அதனை அகற்ற சொல்கின்றீர்கள் என அந்த பத்திரிகையாளர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  குறிப்பிட்ட பத்திரிகையாளரின் கமராவை தள்ளிவிட்டுள்ளார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் இது ஒன்லவ் தொடர்பானது அனைவரையும் மதிப்பது தொடர்பானது என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பின்னர் கருத்து தெரிவித்த  அந்த பத்திரிகையாளர் நாங்கள் இங்கிருக்கும்போது அரசியல் ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்து அவதானமாகயிருக்கவேண்டும் நிலைமையை தூண்டக்கூடாதுஇஆனால் ஒன் லவ் நிலைமையை பதட்டமானதாக்கும் என நான் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பீபாவின் விதிமுறைகளில் அரசியல் செய்திகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் என்னை பொறுத்தவரை இது அரசியல் செய்தியில்லைஇஇது மனித உரிமை தொடர்பானது இது ஆடைகள் தொடர்பானது மேற்குலகிலும் மனித உரிமை அடிப்படையிலும் இதனை அணிவதற்கு என உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லவ் கைப்பட்டி பிரச்சாரம் எப்போது ஆரம்பமானது

ஒன்லவ் கைப்பட்டி பிரச்சாரத்தை நெதர்லாந்து 2020 ம் ஆண்டு தனது கால்பந்தாட்ட பருவகாலத்தை ஆரம்பித்தவேளை  அறிமுகப்படுத்தியிருந்தது.

அனைத்து மக்களையும ஐக்கியப்படுத்தும் முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவும் அனைத்து வகையிலான பாரபட்சங்களையும் கண்டிப்பதற்காகவும் நெதர்லாந்து ஒன்லவ் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.

செப்டம்பர் மாதம் நோர்வே ஸ்வீடன் பிரான்ஸ் உட்பட ஒன்பது நாடுகள் உலக கிண்ணப்போட்டிகள் உட்பட எதிர்வரும் போட்டிகளில் ஒன்லவ் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக  அறிவித்திருந்தன.

ஒன்லவ் என எழுதப்பட்ட இதயத்திற்குள் ஒன்று என்ற எண் பொறிக்கப்பட்ட கைப்பட்டியை அணிவதற்கு அணித்தலைவர்கள் இணங்கியிருந்தனர்.

ஒன்லவ் எல்ஜிபிடிகியு சமூகம் குறித்து எதனையும் நேரடியாக குறிப்பிடாத போதிலும் வாணவில் கொடி என்பது எல்ஜிபிடிகியு சமூகத்தினரை குறிப்பதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2020 இல் வெளியிட்ட அறிக்கையொன்றில் நெதர்லாந்து அணியின் தலைவர் வேர்ஜில் வான் டிக் இவ்வாறு தெரிவித்திருந்தார்-கால்பந்தாட்டர்திற்கு பொருந்தக்கூடிய முக்கியமான செய்தி இது-ஆடுகளத்தில் அனைவரும் சமமானவர்கள் சமூகத்தின் அனைத்து இடங்களிலும்  இதுவே செய்தியாக காணப்படவேண்டும்இஒன்லவ் கைப்பட்டி மூலம் நாங்கள் இந்த செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கட்டாரில் ஏன் இதனை அணிவதற்கு அணிகள் விரும்புகின்றன

ஒருபாலின உறவுகள் என்பது கட்டாரில் குற்றச்செயலாகும்செப்டம்பர் மாதமளவில் எல்ஜிபிடிகியு சமூகத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து துன்புறுத்தியுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில் இந்த கைப்பட்டி என்பது கட்டாரிற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு விடயமாக கருதப்பட்டது.

இனவெறிக்கு எதிரான கண்டனத்தை தெரிவிப்பதற்காக முழங்காலில் அமர்வதை போன்றதே இது. 2020 முதல் இங்கிலாந்து ஐரோப்பிய போட்டிகளில் இதனை பின்பற்றுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33
news-image

சிட்டி லீக் 1ஆம் பிரிவு :...

2023-03-20 13:39:27
news-image

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றார்...

2023-03-20 16:12:31
news-image

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள்...

2023-03-20 13:26:54
news-image

இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட்...

2023-03-20 12:09:34