ஆஷ்னா சாவேரி நடிப்பில் வெளியான 'உச்சிமலை காத்தவராயன்...' பாடல் காணொளி

By Nanthini

23 Nov, 2022 | 12:46 PM
image

சையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் சுயாதீன பாடல்களின் வரிசையில் பொலிவுட் நடிகை ஆஷ்னா சாவேரி நடிப்பில் அமைந்துள்ள 'உச்சிமலை காத்தவராயன்...' எனும் பாடலின் காணொளி வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

பி ரெடி பிலிம்ஸ் சார்பில் ஆனிவி இந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார். இசையமைப்பாளரும் பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் ஆனிவியும் பாடலை பாடியிருக்கிறார். 

''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..." என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா.கா.பா. ஆனந்த், ஆர்.ஜே. விஜய், நடிகை ஆஷ்னா சாவேரி ஆகியோர் நடனமாடியுள்ளனர். 

இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார். பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்த பாடலில் மா.கா.பா ஆனந்த், ஆர்.ஜே. விஜய், ஆஷ்னா சாவேரி மூவரின் தோற்றமும் நடனமும் பாடலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது. இதனால், இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்துக்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53