இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம் இரவில் உறங்காமல் இருப்பதே... - எச்சரிக்கும் இதய நோய் சிகிச்சை நிபுணர்

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 12:12 PM
image

இளம் வயதினர் அதிகம் பேர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு உறக்கமின்மையும், தவறான உணவு பழக்கவழக்கமும் மிக முக்கிய காரணிகள் என்று எச்சரிக்கின்றனர். இது குறித்து இந்தியாவின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் கூறிய தகவல்கள் இங்கே...

மாரடைப்பு என்பது முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கு தான் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போதைய சூழலில் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கான காரணங்கள் என்ன என்பதுதான் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டால் சரியான தூக்கமின்மையே இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார்கள். இரவு நேரத்தில் கண் விழித்திருப்பதும் இதயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

டாக்டர் அரவிந்த்

”இன்றைய இளம் தலைமுறையினரிடம் இரவு தூக்கம் என்பதே குறைவாக உள்ளது. நீங்கள் 2 மணி நேரம், மூன்று மணி நேரம் என இடைவெளி விட்டு தூங்கினால் அன்றைய நாள் முழுமையாக தூங்கியதாக அர்த்தமில்லை. இரவு 7-8 மணி நேரம் முழுமையாக தூங்கி எழுந்தால்தான் நீங்கள் நன்கு தூங்கியதாக அர்த்தம்” எனக் மருத்துவர் அரவிந்த் கூறுகிறார்.

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை இதயத்தின் செயல்பாட்டை குறைக்கின்றன. மன அழுத்தம், பரம்பரை இதய பாதிப்பு, திடீரென அதிக உடற்பயிற்சி செய்தல் போன்றவையும் இளம் வயதில் மாரடைப்பு வரக் காரணம்.

”இன்று பலரும் வீட்டு உணவுகளை விட ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். இது இதயத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே வெளிப்புற உணவுகளை தவிர்த்து வீட்டு உணவுகளை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி” என்கிறார் மருத்துவர்.

இதய நோயை தவிர்க்க:

* பழங்கள், காய்கறிகள் மற்றும் உலர்ந்த பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக செல்போன் லேப்டாப் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம். மன அழுத்தம் என்பதும் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.எனவே குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசுவது நல்லது.

காலையில் சீக்கிரம் எழுவது, குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி, சின்ன சின்ன உடற்பயிற்சி போன்றவை இதயத்தை சீராக வைத்திருக்க உதவும்.

ஹோட்டல் உணவுகள் எண்ணெய் உணவுகள் பர்கர் பீட்சா போன்ற பாஸ்ட்புட் கலாச்சாரத்தை தவிர்ப்பது நல்லது.

மனதிற்கு பிடித்தமான விடயங்களில் அதிக நேரம் செலவிடுவதும் அவசியம்.

இப்படி இருந்தால் இதயத்தை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49