வேகமாக மாற்றம் பெற்று வரும் வாழ்வியல் நடைமுறையின் காரணமாக, 80 , 90 வயதுகளில் இயல்பாக நிகழ வேண்டிய மரணம் என்பது மறைந்து, 40, 50 வயதுகளிலேயே மரணம் என்பது ஏற்பட தொடங்கி விட்டது. இதற்கு பிரபஞ்சத்தையோ.. இறைவனையோ.. எமதர்மராஜனையோ.. குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் தூய ஜீவாத்மா தங்கியிருக்கும் இந்த உடலை நாம் ஆரோக்கியமாக பேணுவதில்லை. தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறோம். ஆசைக்கு இணங்கி அதிலும் குறிப்பாக நாவின் சுவைக்கு அடிமையாகி, பசி இல்லை என்றாலும் அகால வேளையிலும் ருசியான உணவினை சாப்பிட்டு ஆரோக்கியத்தை துறந்து உடலை வளர்க்கிறோம். இதன் காரணமாக உடலுடன் நோயும் வளர்ந்து அவர்களை உயிர்த்துறக்க செய்கிறது.
மேலும் எம்முடைய இல்லங்களில் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் இருக்கலாம். அல்லது நாட்பட்ட நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களும் இருக்கலாம். இவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத வேதனைகள் ஏராளமாக இருக்கும். இவை அனைத்தும் நோய்களால் ஏற்படும் துன்பங்கள். இதனை குறைப்பதற்கு வழி இல்லையா..? என சிலரும், இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு ஆன்மீகம் ஏதேனும் உபாயங்களை வழங்கி இருக்கிறதா..? என்ற தேடலும் சிலரிடம் இருக்கும். ஆனால் இதற்கும் ஒரு வழிமுறை இருக்கிறது.
24 மணித்தியாலங்களில் நாளாந்தம் ராகு காலம் என ஒன்றரை மணித்தியாலமும், குளிகை காலம் என ஒன்றரை மணித்தியாலமும், நல்ல நேரம் என இரண்டொரு மணி நேரமும் இருப்பதைப் போல்.., எமகண்டம் என ஒரு ஒன்றரை மணித்தியாலமும் இருக்கிறது. இந்த எமகண்ட நேரத்தை நாம் சரியாக துல்லியமாக பயன்படுத்திக் கொண்டால், வியாதிகளால் துன்புறும் நிலையிலிருந்து விடுபடலாம். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம். ஏனெனில் எமகண்ட கால அவகாசம் என்பது, உயிரை பறிக்கும் எமதர்மராஜா கடவுளின் நேரம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே எமகண்ட நேரத்தை பயன்படுத்தி ஆயுள் முழுவதும் நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.
உங்களுடைய பூஜையறையில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், எமகண்ட நேரத்தில், அகல் விளக்கு ஒன்றில் தூய பசு நெய்யை ஊற்றி, அதில் ஒரு பஞ்சு திரியை இட்டு, விளக்கேற்றி, எமதர்மராஜனின் ஏதேனும் ஒற்றை வாக்கிய மந்திரத்தை மனமுருக பிரார்த்தித்துக் கொண்டால்.., அந்த எமதர்மராஜனின் கடைக்கண் பார்வை பட்டு, உங்களுக்கு நோயால் துன்புறும் நிலை அகலும். உங்களுடைய மரணம் உங்களுடைய விருப்பப்படி நிகழும். இந்த விளக்கினை சனிக்கிழமை எமகண்ட நேரமான மதியம் ஒரு மணி 30 நிமிடம் முதல் மூன்று மணி வரை மட்டுமே ஏற்ற வேண்டும். அதன் பிறகு அதனை நினைவு வைத்து அணைத்து விட வேண்டும். இந்த ஒன்றரை மணித்தியாலத்தில் நீங்கள் விளக்கேற்றி எமதர்ம ராஜனை மனம் உருக வேண்டுவதன் மூலம் உங்களுக்கான ஆயுளும் அதிகரிக்கும். நோயால் நீங்கள் துன்புறும் நிலையிலிருந்து முழுமையான நிவாரணமும் கிடைக்கும்.
சிலர் இதனை நாளாந்தம் ஏற்றி வழிபடலாமா..? எனக் கேட்பர். ஏனெனில் அவர்களது இல்லங்களில் நோயால் துன்புறுபவர்கள் இருக்கக்கூடும். நாளாந்த எமகண்ட நேரத்தில் இத்தகைய பிரார்த்தனையில் ஈடுபடலாம். ஆனால் எமகண்டம் நேரம் தொடங்கும் நேரத்தில் தொடங்கி, முடியும் நேரத்தில் விளக்கை அணைத்து விட வேண்டும். மேலும் இதற்கென பிரத்யேகமான அகல் விளக்கை பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு. நோயால் வாடுபவர்கள் மட்டுமல்ல நோயற்ற வாழ்க்கையை விரும்புபவர்களும் சனிக்கிழமை தோறும் இந்த எமகண்ட நேரத்தில் நெய் விளக்கேற்றி, எம தீப பிரார்த்தனையில் ஈடுபட்டால் பலன் உண்டு.
சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM