'நிலைமாற்றத்துக்கான பயணம்' மேடை நாடக விழா

By Nanthini

23 Nov, 2022 | 12:27 PM
image

ட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பு கிறிசலிஸுடன் இணைந்து வட மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்திய 'பால்நிலை பாரபட்சம் மிக்க சமூக நியமனங்களும் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் அவற்றின் தாக்கமும்' என்ற ஆய்வினூடாக கண்டறியப்பட்ட சமூக நியமங்களை நிலைமாற்றுவதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'நிலைமாற்றத்துக்கான பயணம்' என்ற மேடை நாடக விழா வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

இதன்போது கதிரொலி கலைக்கூடத்தினரால் 'புவனா', 'விடியல்' ஆகிய நாடகங்களும், செம்முகம் ஆற்றுகைக் குழுவினரால் 'மனச்சிறை', 'சாப்பாட்டு மேசை' ஆகிய நாடகங்களும் மேடையேற்றப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் கடந்த 11ஆம் திகதி தந்தை செல்வா கலையரங்கிலும், 13ஆம் திகதி  கிளிநொச்சியில் கூட்டுறவு மண்டபத்திலும், 18 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்திலும்,  19ஆம் திகதி மன்னார் நகரசபை மண்டபத்திலும், 20ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்திலும் இந்நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. 

இந்நிகழ்வின்போது சட்ட மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பை சேர்ந்த அனுஷா காயத்திரி உரையாற்றுகையில்,

"வட மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ரான்ஸ்வோம் என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பு மற்றும் கிறிசலிஸுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்தோம்.

இந்த ரான்ஸ்வோம் அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் வடக்கில் நிலவுகின்ற பாலியல் பாரபட்சம் மிக்க சமூக நியமங்கள் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அவர்கள் அடைவதில் எவ்வித தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை கண்டறிய முற்படுகிறது. 

இந்த ஆய்வு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, இங்குள்ள மக்களின் கருத்துக்களை உள்வாங்கியே நடத்தப்பட்டுள்ளது. 

பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகளுடனும், கலந்துரையாடலின் ஊடாகவும் கருத்துக்களை பெற்றே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாய்வுகள் இந்த வருடத்தின் (2022) ஆரம்பத்திலேயே நிறைவுசெய்யப்பட்டு, பின் தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு, அவை நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகம் உங்கள் வாசிகசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்நூலிலிருந்து, நமது நாட்டில் நாம் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் உரித்தானவர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இது தொடர்பான விடயங்கள் எமது அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

எனினும், நடைமுறையில் உள்ள பாரம்பரியம் பேணும் சில பெண்களை பாரபட்சத்துக்கு உள்ளாக்கி, அவர்களை வீட்டுக்குள்ளே அடைத்துவைக்கப்படும் சில நியமங்கள் கூட சமூகத்தில் நிலவுகின்றது.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால்,  இதுபோன்ற நடவடிக்கைகள் ஆண்களால் அல்ல, பெண்களாலேயே சமூக மட்டத்தில் பரப்பப்பட்டு வருகின்றது.

எமது இந்த ஆய்வின் முடிவில், பிரதானமான பத்து சமூக நியமங்கள் வடக்கில் இன்றும் அதிகமாக நிலவுகின்றது என்பதை அடையாளப்படுத்தியுள்ளோம்.

வீட்டு வேலை, பிள்ளை பராமரிப்பு, கணவனை கவனிப்பது, பெண்கள் கற்பு என்ற நிலையில் கட்டிப்போடப்பட்டவர்களாக பார்க்கப்படுவது, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது மற்றும் குடும்பத்தின் கௌரவம் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்கையில் பெண்களை உரிமைகளற்ற நியமனங்களாக மாற்றியிருக்கிறது.

ஆகவேதான் இவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான மேடை நாடகங்கள் ஊடாக முனைவுகளை மேற்கொண்டுள்ளோம்" என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50