ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

Published By: Ponmalar

23 Nov, 2022 | 11:10 AM
image

நெஞ்சு வலி ஏற்படுபவர்களில் முப்பது சதவீதத்தினருக்கு இதய பாதிப்பு அல்லாத நெஞ்சு வலி ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவற்றில் ப்ளுரிடிஸ் எனப்படும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளும் உண்டு என குறிப்பிடுகிறார்கள். எம்முடைய மார்பகப் பகுதியை ஒட்டி அமையப் பெற்றிருக்கும் நுரையீரல்களை, மார்பகச் சுவற்றிலிருந்து பிரிக்கும் வகையில் இரண்டு மெல்லிய உறைகள் உள்ளன.

மென்மையான திசு போன்ற இந்த இரண்டு மெல்லிய உறைகளுக்கு இடையே வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது நீர்கட்டிகள் ஏற்பட்டாலோ உண்டாகும் அறிகுறி தான் நெஞ்சு வலி. இது சுவாசிக்கும் போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

நுரையீரலுக்கும், மார்பகச் சுவர்களுக்கும் இடையே அமைந்திருக்கும் ப்ளூரல் எனப்படும் அடுக்குகளில் உள்ள மெல்லிய இடைவெளிகளில், சிறிய அளவிலான திரவம் அதன் இயங்கு திறனின் தன்மைக்காக அமைந்திருக்கும். இந்த திரவத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நுரையீரலின் இயங்கு திறனில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு, சுவாசத்தை கடுமையாக்கி, இருமல், காய்ச்சல், நெஞ்சு வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் சுவாசிப்பதற்காக சுருங்கி விடியும் தன்மை கொண்ட நுரையீரலின் இயங்கு திறனிலும் பாதிப்பை உண்டாக்கும்.

நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், இருமல், காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு இதனால் ஏற்படும் நெஞ்சு வலி, தோள்கள் மற்றும் முதுகு பகுதிக்கு பரவக்கூடும். இவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து இது மாரடைப்பிற்கான அறிகுறியா..? அல்லது மாரடைப்பு அல்லாத வேறு பாதிப்பிற்கான அறிகுறியா..? என்பதனை அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

வைரஸ் தொற்று, பக்டீரியா தொற்று, ஃபங்கஸ் தொற்று, ஓட்டோ இம்யூன் டிஸ்ஸார்டர், நுரையீரல் புற்றுநோய், காச நோய் உள்ளிட்ட பல காரணங்களாலும்  இத்தகைய அறிகுறிகளுடன் நுரையீரலில் பாதிப்பு உண்டாகலாம்.

ரத்த பரிசோதனை, இ சி ஜி, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எலக்ட்ரோ கார்டியோகிராம் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதன் பிறகு இதற்கான முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள்.

அதனைத் தொடர்ந்து நுரையீரலை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பரிந்துரைப்பார்கள். இதன் போது வாழ்க்கை நடைமுறை மாற்றம், முற்றாக புகை பிடிப்பதை தவிர்த்தல் போன்றவற்றையும் வலியுறுத்துவார்கள்.

ப்ளூரெடீக் பெய்ன் எனப்படும் இந்த வலி நெஞ்சு வலியின் ஒரு வகையாக இருந்தாலும், மருத்துவரை சந்தித்து இதனை உறுதிப்படுத்திக் கொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை பெற வேண்டும். அலட்சியப்படுத்தினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, பாரிய பாதிப்பை உண்டாக்கும்.

டொக்டர் கிருஷ்ணா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29