பண்டிகை காலங்களில் வீடுகளில் பெண்கள் கையில் மருதாணியிட்டு, அது அழிந்து விடாமல் இரவு முழுவதும் பாதுகாத்து காலையில் கையை கழுவிய பின் மருதாணி சிவப்பு நிறம் எந்த அளவு பிரகாசமாக உள்ளது என்பதை பார்த்து மகிழ்வார்கள்.
திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய முறையில் பதினாறு வகையான அலங்காரங்களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம்.
பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது.
மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது. பாரம்பரிய மருதாணி உள்ளங்கைகளிலும், கால்களில் மட்டுமே வைக்கப்பட்டது. இப்போது தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை அலங்கரிக்கப்படுகிறது. கைகளை முழுவதுமாக மெஹந்தியால் அலங்கரிக்க விருப்பம் இல்லாதவர்கள் குறைவான டிசைனுடன் கூடிய ஸ்டைலை தெரிவு செய்துகொள்ளலாம்.
மலர்கள் போன்ற டிசைன்களுடன் மெஹந்தி வரைவது உங்கள் கைகளை மேலும் அழகுபடுத்திக் காட்டும். இதற்கு ஏற்றவாறு ஆடை அணிந்தால் நாள் முழுவதும் மற்றவர்களின் பாராட்டு மழையில் நீங்கள் நனைவதை தவிர்க்க இயலாது.
எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.
மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.
மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM