நேபாளத் தேர்தல்: பிரதமர் பகதூர் தூபா தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக வெற்றி

Published By: Sethu

23 Nov, 2022 | 10:19 AM
image

நேபாள பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா, தனது தொகுதியில் தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக வெற்றியீட்டியுள்ளார்.

நேபாள பாராளுமன்ற பொதுத் தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 

இத்தேர்தலில் தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7 ஆவது முறையாக ஷேர் பகதூர் தூபா  வெற்றி பெற்றுள்ளார். 

நேபாளத்தில்  2006ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை. இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள பாராளுமன்றத்துக்கு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல்கள் நடந்தன. 

பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதேபோல் மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8 ஆம் திதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் நேபாள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூ.எம்.எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து சார்பு கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 

ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி சுமார் 75 ஆசனங்களை வென்றுள்ளது அல்லது வெற்றியை நெருங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரதான எதிர்க்டக்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களை வென்றுள்ளதுடன் 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52