போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறுகிறார் என மென்செஸ்டர் யுனைடெட் கழகம் செவ்வாய்க்கிpழமை அறிவித்துள்ளது. பரஸ்பர இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவர் வெளியேறுகிறார் எனவும் அக்கழகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
மென்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்காக இரு ஒப்பந்த காலங்களில் விளையாடி, 346 போட்டிகளி; 145 கோல்களை அடித்த ரொனால்டோவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவரினதும் அவரின் குடும்பத்தினரதும் எதிர்காலத்துக்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் அக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னதாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ அளித்த செவ்வியொன்றில், மென்செஸ்டர் கழகத்திலிருந்து தான் விலக நிர்ப்பந்திப்பதற்கு உயர் அதிகாரிகள் பலர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
கழகத்தின் முகாமையாளர் எரிக் டென் ஹக் தன்னை மதிப்பதில்லை எனவும் அதனால் தானும் அவருக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ரொனால்டோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (-சேது)
தொடர்புடைய செய்தி
மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM