கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று (22) நடைபெற்ற முதல் போட்டியில் ஆர்ஜென்டீனாவை சவூதி அரேபியா 2:1 கோல்களால் வென்றது.
குழு சி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தாரின் லூசெய்ல் நகரில் நடைபெற்றது
இப்போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி கோல் புகுத்தினார்.
48 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய வீரர் சலே அல்சேஹ்ரி கோல் புகுத்தி, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
53 ஆவது நிமிடத்தில் சவூதி அரேபியாவின் சலீம் அல்தாவ்சரி அடித்த கோல், சவூதி அரேபியாவை 2:1 கோல்கள் விகிதத்தில் முன்னிலைக்கு கொண்டு வந்தது.
இறுதியில் சவூதி அரேபியா கோல் விகிதத்தில் ஆர்ஜென்டீனாவை வென்றது.
இரு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீனா தொடர்ச்சியாக 36 போட்டிகளில் தோல்வியடையாமல் இந்த உலக கிண்ண சுற்றுப்போட்டிக்குள் பிரவேசித்தது.
சம்பியனாகக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஆர்ஜென்டீனா, சவூதி அரேபியாவிடம் தோல்வியுற்றமை அதிர்ச்சிக்குரியதாகும்.
சர்வதேச கால்பந்தாட்டத் தரவரிசையில் ஆர்ஜென்டீனா 3 ஆவது இடத்திலும் சவூதி அரேபியா 51 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (-சேது)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM