இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம்-மேகாலயா எல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வன அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் எல்லையில் பதற்றம் நிலை உருவாகியுள்ளதாக மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்திற்கு அடுத்து உள்ள மேகாலயாவுக்கு இடையே மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் முக்ரோ என்ற இடம் இரு மாநில எல்லையாக உள்ளது.
இந்த பகுதியில், திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால், இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், அசாம் வன அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இன்று (நவ. 22) முதல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இச் சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ள மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது. வழக்கு பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM