தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

By Ponmalar

22 Nov, 2022 | 05:20 PM
image

குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல்  சராசரியாக மணம் முடித்த தம்பதிகளில் ஐந்து பேரில்  ஒருவருக்கு    ஏற்படுகிறது.  அதாவது 20 சதவீதமான தம்பதிகளின்  பிரச்சினை குழந்தைப் பாக்கியம் தாமதமடைதலாகும். 

இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்  40சத வீதமான காரணங்கள் பெண்கள் தரப்பில் இருந்தும் 40சதவீதமான காரணங்கள் ஆண்கள் தரப்பில் இருந்தும்  20 சதவீதமான காரணங்கள் ஆண், பெண் இருவரிலும்  எந்தக்குறைபாடுகளும் இல்லாது  எல்லாம் சரியாக இருந்தும் தாமதமாகிக் போவதைக்காணலாம் 

குழந்தைப் பாக்கியம் தாமதமடைகிறது என வரையறுக்க  தம்பதிகள் குறைந்தது ஒரு  வருட காலமாவது  ஒன்றாக வாழ்ந்திருத்தல்  வேண்டும்.  ஆனால் பெண்ணின் வயது 35க்கு மேலாக இருந்தால்  ஆறு மாத கால உறவின் பின்னரே  நாம் குழந்தைப்பாக்கியம்  தாமதமடைவதற்கான காரணங்களை தேட வேண்டும். 

குழந்தைப் பாக்கியம் தாமதமடைவதற்கான காரணங்களை கண்டறிவது எப்படி..? 


குழந்தைப் பாக்கியம் என்பது கணவன்–மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட விடயம். எனவே  இருவரையும் சந்தித்து விபரங்களை கேட்டறிந்து  பரிசோதனைகள் மேற்கொள்வதன்  மூலமே காரணங்களை  கண்டறிய முடியும். சிகிச்சைகளை  சரியாக. மேற்கொள்ள முடியும். தம்பதிகளிடம் விபரங்களை  கேட்டறியும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். 

*குழந்தைப்பாக்கியம் தாமதமடையும் கால எல்லை  மற்றும் இதற்கு முன்னர் செய்யப்பட்ட பரிசோதனை மற்றும்  சிகிச்சைகள் தொடர்பான விடயங்கள். 

*மாதவிடாய் சக்கரம்  தொடர்பான விடயம்  மாதவிடாய் தொடங்கிய  வயது,  மாதம் ஒரு முறை சரியான ஒழுங்கில்  ஏற்படுகின்றதா..?மாதவிடாய் வருவதற்கு முன்னர் ஏற்படக்கூடிய  உடல் மாற்றங்கள் மற்றும்  மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடி வயிற்றுவலி  தொடர்பான விபரங்கள்    

*இதற்கு முன்னர் கர்ப்பம் தரிக்கப்பட்டதா அவ்வாறாயின் அந்த கர்ப்பகாலம்  தொடர்பான விபரங்களும்  கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களும்  அதற்கான  சிகிச்சைகளின்  விபரங்களும் தேவை.

* குடும்பக்கட்டுப்பாட்டு  முறைகள், ஊசிகள் ஏதாவது பாவித்தீர்களா  என்பது தொடர்பான விபரங்கள் 

*தம்பதிகள்  ஆரோக்கியமான உடல் உறவில் ஈடுபடும்  நாட்கள் சராசரியாக  ஒரு வாரத்திற்கு எத்தனை தடவை  மற்றும் உடல் உறவில் ஏற்படும்  குறைபாடுகள், சிக்கல்களை தம்பதிகள்  டாக்டரிடம் தெளிவு படுத்த வேண்டும் . கடந்த காலங்களில்  அடி வயிற்றில் ஏதாவது அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டனவா? கிருமித் தொற்றுக்கள் ,பாலியல் தொற்று நோய்கள்  ஏற்பட்டனவா..? என்பன தொடர்பான விபரங்கள்.

* தைரோயிட் சுரப்பி தொடர்பான நோய்கள். பெண்ணின் முகத்தில்  அசாதாரண உரோம  வளர்ச்சி, முகப்பருக்களின் அதிகரிப்பு போன்ற விபரங்கள். 

*ஆண், பெண் இருவரும்  தற்போது தொடர்ச்சியாக  எடுக்கும்  மருந்துகள்  மற்றும்  மருந்துகளின் ஒவ்வாமை தொடர்பான விபரங்கள்.  

*நெருங்கிய உறவினர்களிடையே  ஏற்பட்டிருக்கும் பரம்பரை நோய்கள் , குழந்தையற்ற  தன்மைகள் ,மெனோபோஸ் பருவமடையும் வயது எல்லைகள் போன்ற விபரங்கள் .  தம்பதிகள் இருவரும் வேலை  செய்யும் இடங்களில்  ஏதாவது இராசாயன பதார்த்தங்கள் , கதிர் வீச்சுகள்  மிகையான வெப்பத்திற்கு ஆளாக வேண்டிய நிலைமை உள்ளதா..?

*புகைப்பிடித்தல் , மதுபானம்  அருந்துதல் போன்ற பாவனைகள் உள்ளனவா..?

மேற்குறிப்பிட்ட விபரங்களை எடுத்த பின்னர் பெண்ணின் உடல் நிறையை அளந்து  உயரத்திற்கு ஏற்றவாறான உடல் நிறை சுட்டெண் உள்ளதா என பார்க்க வேண்டும். மேலும் பெண்ணின்  கழுத்துப் பகுதியில் தைரோயிட்  சுரப்பியில் வீக்கம்  மற்றும் மார்பகத்தில் திரவம் வடியும் தன்மை  போன்றன பற்றி அறிந்திருக்க வேண்டும்.  இவை குழந்தைப் பாக்கியத்துக்கு பொறுப்பான  ஹோர்மோன் குறைபாடுகளை எடுத்துக்காட்டும்.  

குழந்தைப்பாக்கியம் தாமதமடைவதற்கான  காரணங்களை கண்டறிய செய்யப்படும் பரிசோதனைகள்  எவை..?
ஆண்கள் தரப்பில் விந்துப் பரிசோதனை முக்கியமானது. பெண்கள் தரப்பில் சூல் முட்டை வளர்ச்சி  ஒழுங்காக நடைபெறுகிறதா என் கண்டறிய வேண்டும்.  அடி வயிற்றில் கர்ப்பப்பை  மற்றும் சூலகங்கள்  தொடர்பான கட்டிகள்  உள்ளனவா என கண்டறிய வேண்டும். பலோப்பியன் குழாய்களின் அடைப்படைத்தன்மை  கண்டறியப்பட வேண்டும். 

சூல் முட்டைகளின் வளர்ச்சி எப்படி கண்டறியப்படுகிறது
சூல் முட்டைகளின் வளர்ச்சி குறைபாடு 15 சத வீதமான பங்களிப்பை குழந்தைப்பாக்கியம்  தாமதமடைவதில் ஏற்படுத்துகின்றது. சிகிச்சைக்குவரும் பெண்களில் 40 சதவீதமானவர்களுக்கு  சரியான சூல் முட்டை வளராததால் தான் குழந்தைப் பாக்கியத்தில் தாமதம் ஏற்படுகிறது. சூல் முட்டை ஒழுங்காக வளர முடியாமல்  போவதற்கான  காரணங்களாக பொலிசிஸ்றிக்  சூலகங்கள்   தைரோயிட்  சுரப்பி குறைபாடுகள்  , புறோலக்ரின் ஹோர்  மோன் அதிகரிப்பு,  உணவு உட்கொள்ளும் முறைகள், அதி கூடிய உடற்பருமன், அதி கூடிய ,உடற்பயிற்சி என்பவற்றைக்கூறலாம்.  பெண்களின் மாதவிடாய் சக்கரத்தை  வைத்து ஒழுங்கான சூல் முட்டை வளருகின்றதா இல்லையா என ஊகிக்க முடியும்  அதாவது   25-35 நாட்கள்  இடைவெளியில்  மாதவிடாய் மாதா மாதம்  வருகின்ற தன்மை  மற்றும்  மாதவிடாய் வருவதற்கு  முன்னர் உள்ள வாரங்களில் ஏற்படும் உடல் உணர்வு மாற்றங்கள்  என்பன  பெரும்பாலும் சூல் முட்டை வளர்ச்சி, சூல் முட்டை வெளியேற்றம்  என்பவற்றை ஊகிக்க முடியும் . இவ்வாறு  சூல் முட்டை வளர்ச்சியை கண்டறிவதற்கான எளிமையான பரிசோதனைகளாக  இரத்தத்தில் பரிசோதிக்கப்படும்  புறஜெஸ்ரோன் ஹோர்மோன் அளவு  பெண்ணின் உடல்நிலை மாற்றம்  மற்றும் பெண்ணின் சிறு நீரை   அளக்கும் LH பரிசோதனை என்பன உதவும்.

மேலும் மாதவிடாய் தொடங்கி 12 ஆம் 13ஆம்  நாட்களில்  செய்யப்படும் tv Scan மூலமும்  சூல் முட்டையின் பருமனை  அளந்து சூல்  முட்டை வளர்ச்சி உறுதிசெய்யப்படும் 

சூல் முட்டைகளின் சேமிப்பு பெண்ணின் சூலகத்தில் போதுமானதாக உள்ளதா  என்பதனை எவ்வாறு கண்டறியலாம்?
பெண்களின் வயது 25க்கு மேலாக உள்ளதோடு தொடர்ச்சியான சிகிச்சை மூலம் சூல் முட்டைகள் சரியாக  வளராவிட்டாலும் தொடர்ந்தும் குழந்தைப் பாக்கியம்  தாமதமடைந்தால்    சூல் முட்டையின் சேமிப்பை அறிய வேண்டும் . இதற்காக AMH ஹோர்மோன் பரிசோதன INHIBIN-B பரிசோதனை மாதவிடாய் தொடங்கி  3ஆம் நாளில் செய்யப்படும்.FSH ஹோர்மோன் பரிசோதனை ஸ்கானின் மூலம் அறியும்  சிறிய முட்டைகளின் சராசரி கண்காணிப்பு (AFC) மற்றும் சூலகத்தின் பருமன் கண்காணிப்பு என்பன உதவும். அடுத்தது பயோப்பியன் குழாய் அடைப்பானது  ஸ்கான் மூலம் HYCOSY பரிசோதனை, Xray மூலம், HSG பரிசோதனை மற்றும் லெப்ரஸ்கோப்பி முறை மூலம் அறியலாம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில்...

2022-11-24 12:23:13
news-image

குழந்தையை கறுப்பாக்குமா இரும்புச் சத்து ?

2022-11-24 11:44:18
news-image

குழந்தைகளின் இதயம்

2022-11-23 16:05:33
news-image

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம்...

2022-11-23 12:12:37
news-image

உடல்நிலை சீராக இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி...

2022-11-23 12:24:33
news-image

ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

2022-11-23 11:10:06
news-image

தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

2022-11-22 17:20:12