மீன் வறுவல்

Published By: Ponmalar

22 Nov, 2022 | 04:06 PM
image

தேவையான பொருட்கள்: 

மீன் - ½ கிலோ

மல்லிதூள் - 1½ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்

எலுமிச்சைசாறு - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலைமா - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு

அரைக்க: 

மிளகு - 1 டீஸ்பூன்

பூண்டு - 6 பல்.

செய்முறை: 

மீனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். 

அகலமான பாத்திரத்தில் மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், உப்பு , கடலைமா, எலுமிச்சை சாறு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 

மிளகு மற்றும் பூண்டை நன்கு அரைத்து மசாலா கலவையில் சேர்க்கவும். 

பின்னர் மீன் துண்டுகளை மசாலாவில் நன்கு பிரட்டி 1/2 மணிநேரம் வைத்திருக்கவும். 

கடாயில் எண்ணை காய்ந்ததும் பொரித்து சூடாக பரிமாறவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்