உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் தீர்மானிக்கவில்லை - விஜேதாச

Published By: Digital Desk 2

22 Nov, 2022 | 04:28 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. தேர்தலை நடத்துவதில் காணப்படும் சிக்கல்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் நீக்கிக் கொள்ளவே எதிர்பார்ப்பதாக நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர்  மேலும் தெரிவிக்கையில் ,

தேர்தல் தொடர்பாக சில விடயங்களை ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. இந்த விடயத்தை மையப்படுத்திய புதிய சட்டங்கள் பலவற்றை கொண்டு வர உத்தேசித்துள்ளோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் தற்போது 8500 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆரம்பத்தில் 4000 மாக மாத்திரமே காணப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் இந்த எண்ணிக்கை 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர் தெரிவு , உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு சாதகமான தீர்வாக அமையும்.

உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இவ்வாறு பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய தெரிவுக்குழு ஊடாக முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்வு திட்டங்கள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும்.

இதுவரையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதில் காணப்படும் சிக்கல்களை நீக்கிக் கொள்ளவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன்...

2024-09-19 18:50:08
news-image

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன்...

2024-09-19 19:13:19
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில்...

2024-09-19 18:48:08
news-image

விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்து...

2024-09-19 18:33:51
news-image

சிலாபம் - குருணாகல் வீதியில் லொறி...

2024-09-19 18:50:35
news-image

தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை...

2024-09-19 18:46:15
news-image

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 11 தேர்தல்...

2024-09-19 17:30:24
news-image

சட்டத்துக்கு மதிப்பளித்து, கடமையை நிறைவேற்றுவதன் மூலம்...

2024-09-19 17:57:10
news-image

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில்...

2024-09-19 17:44:01
news-image

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கிருமிநாசினி மருந்துடன்...

2024-09-19 17:14:13
news-image

கொஹுவலை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2024-09-19 17:00:22
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-19 16:19:22