‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை மஷூறா

By Ponmalar

22 Nov, 2022 | 03:04 PM
image

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தி மஷூறா சுஹூறுத்தீன், 2021ஆம் ஆண்டிற்கான ‘இலக்கிய. வித்தகர்’ விருதைப் பெற்றுள்ளார். 

1979 இல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுத ஆரம்பித்து, இலங்கையின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதி வருபவர். தற்போது பல மின் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார். sithy mashoora suhurudeen என்ற தனது முகநூல் பக்கத்திலும் தனது படைப்புகளை பதிவேற்றியும் வருகிறார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம் பாடல், வில்லுப்பாடல், தாளலயம் பேச்சு, சித்திரம், கைப்பணி, சஞ்சிகை என பல் துறைகளிலும் தேர்ந்தவராவார்.

மாவடிப்பள்ளி கமு/அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் இவர், மொழித் தேர்ச்சியிலும் படைப்பாக்கத்திறனிலும் மாணவர்களை சிறந்த அடைவைப் பெறச்செய்தவர்.

2017இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய ‘கலைஞர் சுவதம்’ விருது உட்பட இலக்கியத்திற்காக பதின்மூன்று விருதுகள் பெற்றிருக்கிறார். 

எழுவான் கதிர்கள் (1986), சொல்லாத சேதிகள் (1986), உயிர்வெளி (1999), பெயல்மணக்கும் பொழுது (சென்னை வெளியீடு 2007), கண்ணாடி முகங்கள் (2009), ஓடும் நதியைப் பாடும் மலர்கள் (1997), நதியைப்பாடும் நந்தவனங்கள் (2014), 1000 கவிஞர் கவிதைகள் (2017), சுருக்குப் பை (2020 இந்தியவெளியீடு) போன்ற இலங்கை, இந்தியா உட்பட பத்து கவிதைத் தொகுதிகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

கடந்த வருடம்(2021)இல் ‘நதிகளின் தேசியகீதம்’ எனும் இவரது சுயகவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. தவிர, 63 முஸ்லிம் பெண்களின் கவிதைகளைத் தொகுத்து ‘சுட்டுவிரல்’ எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார்.

இதுவே இலங்கையில் முஸ்லிம் பெண்களின் முதலாவது கவிதைத் தொகுதியாகும். 

அச்சு, றோணியோ, கையெழுத்து என 30 க்கு மேற்பட்ட சஞ்சிகைகளை வெளியிட்டிருக்கிறார். கையெழுத்தாக ஆரம்பித்து றோணியோவில் முடிவுற்ற ‘நிறைமதி’ சஞ்சிகை 80ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் தேசியமட்டத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆக்கமாகும். 

காலாண்டு சஞ்சிகையான ‘நிறைமதி’ 22 இதழ்களை வெளியிட்டிருந்தது.

இவரால் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவரும் Sri Lanka pen club, ஆற்றலுள்ள பெண்களுக்கு களம் அமைக்கும் பணியைச் செய்து வருகிறது. கடந்த வருடமும் இவ்வமைப்பின் மூலம் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கான தேசிய மகாநாடு ஒன்றினையும் நடாத்தியிருந்தார். இவ்வமைப்பின் மூலம் ‘அவரி’ என்ற மின் சஞ்சிகையொன்றினையும் வெளியிட்டு வருகிறார்.

தனது மாணாக்கர்களின் கவிதைகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகள் ரோணியோவில் வெளியிட்டிருக்கிறார்.

மாணவர்களை வழிநடத்தி வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள் நான்கு தடவைகள் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டியிருக்கின்றன. கலாசார அலுவல்கள் அமைச்சின் வெளியீடான ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’, ‘அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு’ மற்றும் ‘இலங்கை தமிழிலக்கிய வளர்ச்சி’ போன்ற நூல்களுட்பட பதினைந்திற்கு மேற்பட்ட களங்களில் இவர் பற்றிய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

பாடலாக்கம், கவிதை, சிறுகதை, நாடகத்தயாரிப்பு என தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இவரது பன்னிரெண்டு நாடகங்கள் மாவட்டம், மாகாணம், தேசியமட்டம் என வெற்றிகளையீட்டியுள்ளன. தேசிய மட்டத்தில் மூன்று நாடகங்கள் (பள்ளி நாடகங்கள்) வெற்றியீட்டியுள்ளன. தேசிய மட்டத்தில் நாடகத் தயாரிப்பிற்கான விருதும் பெற்றுள்ளார்.

வீரகேசரி, தினக்குரல், பிறைவானொலி, ஊவா வானொலி, வெற்றி வானொலி, ரூபவாஹினி போன்றவற்றில் இவர் செவ்விகள் காணப்பட்டுள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்து பணியாற்றி வரும் இவர், அகில இலங்கை சமாதான நீதிவானுமாவார்.

இவ்வாறு பல் திறமைகளைக் கொண்டிருக்கும் சம்மாந்துறை மஷூறா, கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற உயரிய விருதான ‘இலக்கிய வித்தகர்’ விருதினை தனதாக்கிக் கொண்டுள்ளார். 

கடந்த 18.11.2022 இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினரான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதின் கரங்களால்  இவர் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05