செம்மணி இந்து மயானத்தை அபிவிருத்தி செய்ய உதவுமாறு கோரிக்கை

Published By: Vishnu

22 Nov, 2022 | 02:51 PM
image

யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செம்மணி இந்து மயான அபிவிருத்தி சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மணி இந்து மயானத்தை துப்பரவு செய்யும் பணியில் இன்றைய தினம் (21) செவ்வாய்க்கிழமை மயான அபிவிருத்தி சபையினர் ஈடுபட்டனர்.

குறித்த துப்பரவு பணியின் பின்னர் செம்மணி இந்து மயான அபிவிருத்தி சபையின் தலைவர் சி.இலட்சுமிகாந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் அந்த கோரிக்கையில், 

யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின் தகன மேடை அமைக்க தீர்மானித்துள்ளோம். இதுவரை விறகையே எரிபொருளாகக் கொண்டு இம்மயானம் இயங்கி வருகின்றது.

தற்போது சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும், மரங்களை வெட்டுவதை நிறுத்தும் பொருட்டும், விறகுகளின் நாளாந்த விலையேற்றத்தைக் கணக்கிலெடுத்தும் செம்மணி மயானத்தை மின் தகன மேடையை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இச்செயற்றிட்டத்திற்கு இந்த மயானத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும்.

மயானத்தை பயன்படுத்துபவர்கள் பொறுப்புடன் மயானத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25