கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள் நூல் வெளியீடு

Published By: Ponmalar

22 Nov, 2022 | 02:44 PM
image

இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருடங்களாக மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களினால் தொடராக எழுதப்பட்ட சிந்தனைகளை தொகுத்து மருதமுனை ஆசிரியர் நெளபாஸ் ஜலால்தீன் எழுதிய ‘கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, அம்பாறை மாவட்ட றாபிததுன் நளீமிய்யீன்  ஏற்பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் அதன் அம்பாறை மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்றது.

பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி உஸ்தாத் அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பழீல் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடாதிபதி பேராசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் நிகழ்த்தினார். 

நூலின் முதல் பிரதியை மருதமுனை ஜாஹி வீவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் டாக்டர் எம்.ஐ உபைதுர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு உரையாற்றிய ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பிடாதிபதி, இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் வகி பங்கு முக்கியமானதாகும்.  மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி அவர்களின் வாழ்வியல் தடயங்களையும் அவருடைய சிந்தனைகளையும் முஸ்லிம் சமூகத்திற்குள் அவர் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளை பற்றியும் உரை நிகழ்த்தினார்.

நிகழ்வுகளை அஷ்ஷெய்க் கே.எல். நைஸர், அஷ்ஷெய்க் றாபி எஸ் மப்றாஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இந்த நிகழ்வில் வரலாற்றில் ஓர் ஏடு  புகழ் ஏ.சி.ஏ.எம். புஹாரி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர்களான றாபிததுன் நளீமிய்யீன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

(ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56