22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி மாநாடு டிசம்பரில் ஆரம்பம் - இலங்கை வர்த்தக சம்ளேனம்

By Digital Desk 2

22 Nov, 2022 | 02:44 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை வர்த்தக சம்ளேனத்தின் (The Ceylon Chamber of Commerce)  22ஆவது வருடாந்த பொருளாதார உச்சி மாநாடு எதிர்வரும் டிசம்பர் 5ஆம், 6 ஆம் திகதிகளில் கொழும்பு ஷங்ரீ- லா  ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத் தவிசாளர் விஷ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாடானது, 'குழப்பகரமான நிலையிலிருந்து மீட்டு எடுப்பதற்கான வாய்ப்பு' எனும் தொனிப்பொருளில் நடத்தப்படவுள்ளது.

இந்த உச்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதம பேச்சாளாராக பொருளியல் நிபுணரான பரமேஸ்வரன் ஐயர் இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ளார். இவர் அந்நாட்டின்  National Institution for Transforming India - NITI)  இன்  பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார். மேலும்,  உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் மார்டின் ரெய்சர்  கெளரவ அதிதியாக பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், ஜோர்ஜியாவின் முன்னாள் நிதி அமைச்சராகவிருந்த  அலெக்ஸி அலெக்ஸ்வில்லி பங்கேற்கவுள்ளார். ஜோர்ஜியா பொருளாதார சிக்கல்களிலிருந்து எவ்வாறு மீண்டெழுந்தது என்பது  தொடர்பான பொருளாதார முறைமைகள் மற்றும் அனுபவங்களை அவர் தெளிவுப்படுத்தவுள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதார ரீதியாக எதிர்கொண்டுள்ள சரிவிரிலிருந்து மீள கட்டியெழுப்புவது குறித்து விரிவான சொற்பொழிவி  மற்றும் கலந்துரையாடல்கள் உள்நாட்டு பொருளியல் நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில் அதிபதிர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40
news-image

 ‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய...

2022-11-11 09:45:26
news-image

சவால்களுக்கு மத்தியிலும் இவ்வாண்டின் 3 ஆவது...

2022-11-11 09:40:26
news-image

தெளிவான தடையற்ற காட்சி அனுபவத்தை 32...

2022-11-10 12:52:56
news-image

SOS Children’s Villages Sri Lanka...

2022-11-07 20:06:25
news-image

வாடிக்கையாளர் மையத்தன்மையைக் கொண்டாடியுள்ள DFCC வங்கி

2022-11-07 20:05:30