கேரளா கஞ்சாவைக் கடத்தியவர் கல்முனையில் கைது

Published By: Digital Desk 2

22 Nov, 2022 | 02:41 PM
image

250 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை ( நவ. 21)  இரவு விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீரமுனை பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த  கஞ்சாவை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்தவேளை கைதானார்.

அவரிடமிருந்து இருந்து பொதி செய்யப்பட்ட  250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நபர் கஞ்சாவுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56