முதலீடு செய்யக்கூடாத ராசி, லக்னம்

By Ponmalar

22 Nov, 2022 | 01:54 PM
image

இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு, வாழ்வாதாரப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் எம்மில் பலரும் திடீரென்று அதிக அளவிலான பணவரவு வேண்டும் என தீவிரமாக எண்ணத் தொடங்குகிறார்கள்.

இதற்கான தொடக்க நிலை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். இதை குறி வைத்து யாரேனும் ஏதாவது தாந்த்ரீக பரிகாரங்களையோ அல்லது சோதிட பரிகாரங்களையோ சொன்னால் அதனை உடனடியாக மேற்கொள்கிறார்கள்.

திடீரென்று கோடீஸ்வரனாகி விட வேண்டும் என நினைப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். மேலும் 'குறைந்த முதலீடு.. நிறைந்த லாபம்' என்ற வகையில் கோடிக்கணக்கிலான பணம் உடனடியாக கிடைக்க வேண்டும் என நினைப்பதும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, 'கூடுதலாக வட்டியை வழங்குவோம்.

பணத்தை குறைந்த கால அவகாசத்தில் இரட்டிப்பாக்கித் தருவோம்' என விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். வேறு சிலர் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அறிமுகமாகி இருக்கும் கிரிப்டோ கரன்சி எனப்படும் எண்ம நாணயத்திலும் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். வேறு சிலர் பங்கு சந்தை, சீட்டு நிதியம், சூதாட்டம், லொத்தர் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.

வெகு சிலருக்கு மட்டுமே இதில் அதிர்ஷ்டத்தின் காரணமாக லாபம் கிடைக்கிறது. தொடர்ந்தும் கிடைக்கிறது. ஆனால் எந்த நிலையிலும் பின்வரும் ராசிக்காரர்கள் மற்றும் லக்னக்காரர்கள் இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

அவர்கள் யார்? என்றால், தனுசு ராசியும், தனுசு லக்னமும் தங்களின் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள், இதுபோன்ற திடீர் அதிர்ஷ்டம் தரும் துறைகளில் முதலீடு செய்யக்கூடாது. அதிலும் மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தை லக்ன புள்ளியாகவும், ராசியாகவும் கொண்டவர்கள் முதலீடு செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் தனுசு ராசி, கால புருஷ தத்துவப்படி ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது. இந்த இடம் முன்னோர்களின் சாபத்தை பெற்றிருப்பதும், பித்ரு தோஷத்துடன் இருப்பதையும் குறிக்கிறது.

மேலும் இந்த ராசி அதிபதியாக குரு இருந்தாலும், இவர்களுக்கு ராகு பகவான் ஆசையை தூண்டி நஷ்டத்தை ஏற்படுத்தி கர்மாவை கழிப்பார்.

இதன் காரணமாக இவர்களுக்கு ராகுவின் சூட்சுமத்துடன் கூடிய துறைகளான பங்கு சந்தை, எண்ம நாணயம், சூதாட்டம், சீட்டு நிதியம், லொத்தர் போன்றவற்றில் முதலீடு செய்ய வைத்து, உங்களை பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பை உண்டாக்குவார். சிலருக்கு மட்டுமே அதிலும் குறிப்பாக வெகு சிலருக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு.

மேலும் இவர்களுக்கு ஐந்தாம் இடமான மேஷம், பூர்வ புண்ணிய ஸ்தானமாக இருப்பதாலும், சூரியன் இங்கு உச்சமாக இருப்பதாலும், அரசாங்க ரீதியிலான தொடர்புகள் ஏதேனும் ஒரு வகையில் ஆயுள் முழுவதும் நீடித்திருக்கும். அதாவது இவர்கள் அரசாங்க சார்பில் அனுசரணையுடன் கூடிய சலுகைகளை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் தனுசு ராசியில் எந்த கிரகமும் உச்சமோ, நீச்சமோ பெறுவதில்லை.  எல்லா கிரகங்களும் இங்கு சமம் என்பதால், இந்த ராசியில் பிறந்தவர்களும், இந்த லக்னத்தில் பிறந்தவர்களும், திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ராகு பகவானின் பரிபூரண ஆசி கிடைப்பது குறைவு என்பதால், இவர்கள் பங்கு சந்தை, எண்ம நாணயம் போன்றவற்றில் முதலீடு செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும் என ஜோதிட வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

-சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜாதக கட்டங்களில் உள்ள வெற்றிக்கான சூட்சும...

2022-12-09 17:08:34
news-image

சனி மைந்தன் மாந்தியின் அருளை பெறுவதற்கான...

2022-12-05 13:10:18
news-image

டிசம்பர் மாத ராசி பலன்கள் 01.12.2022...

2022-12-01 15:42:27
news-image

கனவுகள் காண்பதும் கர்மாவா...?

2022-11-25 11:00:22
news-image

ஆயுளை நீட்டிக்கும் எமகண்டம்..!

2022-11-23 13:04:37
news-image

முதலீடு செய்யக்கூடாத ராசி, லக்னம்

2022-11-22 13:54:10
news-image

சகுனங்கள், சமிக்ஞைகள் இரண்டும் ஒன்றா..? வேறு...

2022-11-15 12:57:53
news-image

வெளிநாடுகளில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய...

2022-11-14 17:38:58
news-image

ஞாயிறு இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது...

2020-06-17 21:19:11
news-image

கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

2018-08-30 15:41:55
news-image

"எந்­த­வொரு படைப்­பிற்கும் முடிவில் ஒரு சிறு...

2018-05-09 10:25:54
news-image

"நல்ல நூல் நிலையம் ஒன்றின் பாதிப்பொருளை...

2018-05-05 10:32:40