அவல் இட்லி

Published By: Ponmalar

22 Nov, 2022 | 01:50 PM
image

தேவையான பொருட்கள்: 

ஊற வைத்த பச்சரிசி - 2 கப்

அவல் - 1 கப்

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

முந்திரி பருப்பு - 10 (பொடித்தது)

இஞ்சி - 1 டீஸ்பூன்

 கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தயிர் - தேவைக்கேற்ப.

செய்முறை: 

அவலை நன்கு களைந்து, தயிரில் ஊற வைக்கவும். 

அரிசி, தேங்காய்த்துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். 

அவலை ஊற வைத்து, தனியே அரைத்து, இவற்றையெல்லாம் ஒன்றாக கலந்து, பொடித்த முந்திரி, இஞ்சித்துருவல் கலந்து, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இட்லி செய்யலாம். 

சுவையான மிருதுவான அவல் இட்லி ரெடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்