ஐ.தே.க. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டதன் விளைவையே தற்போது அனுபவிக்கின்றோம் - கபீர் ஹாசிம்  

Published By: Vishnu

22 Nov, 2022 | 02:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

அரச நிறுவனங்களை மறுசீரமைக்க 2002 ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டதன் விளைவையே தற்போது நாங்கள் அனுபவித்து வருகின்றோம். 

அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் 1.2 ரில்லியன் ரூபா பாதுகாக்கப்பட்டு நாடு வங்குராேத்து அடைந்திருக்காது. அத்துடன் அரச வருமானத்தில் நூற்றுக்கு 130வீதம் கடன் வழங்குவதற்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குமே ஒதுக்கவேண்டி இருக்கின்றது.

இந்த அந்தளவு பொருளாதாரம் வீழ்ச்சியடைய  விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் பிரகாரம் 2004 க்கு பின்னரான காலமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ், கோத்தாபய ராஜபக்ஷ் பசில் ராஜபக்ஷ் மற்றும் சிலரே பொருளாதார கொலையாளிகளாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020 அரச வருமானத்தை முன்னாள் ஜனாதிபதி துண்டித்து விட்டார். அதன் பிரதிபலனாக 2021 வரவு செலவு திட்டத்தில் வருமானம் 1457 பில்லியன் ரூபா.  செலவு 3537 பில்லியனாகும். வருமானத்தைவிட செலவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் வட்டிசெலுத்துவதற்கு மாத்திரம் 1047 பில்லியன் ரூபா ஒதுக்கவேண்டி இருக்கின்றது. 2023 மீண்டுவரும் செலவுக்கு 4069 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் 2193 பில்லியன் ரூபா வட்டிசெலுத்த வேண்டி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. 

அடுத்த வருடம் கல்வி, சுகாதாரத்துறைக்கு ஒதுக்கும் தொகையைவிட வட்டிசெலுத்த ஒதுக்கவேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் அடுத்த வருட அரச வருமானத்தை நூற்றுக்கு 69வீதமாக அதிகரித்துள்ளது. இதன் சுமையும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. 

நாடு அந்த அளவுக்கு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கான காரணத்தை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ள பொருளாதார நிபுணர்களின் கூற்றின் பிரகாரம் 2004க்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ், கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், பி,பி, ஜயசுந்தர, நிவாட் கப்ரால் ஆகியோரே பொருளாதார கொலையாளிகள் என்றே எமக்கு கூறவேண்டி ஏற்படுகின்றது.

அத்துடன் 2001/2003 காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து, அரச சேவைக்கு ஆட்கள் இணைத்துக்கொள்வதை அடைநிறுத்துவதற்கு நாங்கள் மிகவும் கடின தீர்மானம் மேற்கொண்டோம். 

ஆனால் 2004இல் மஹிந்த ராஜபக்ஷ் மக்கள விடுதலை முன்னணியுடன் இணைந்து, ஜனரஞ்ஞகமான தீர்மானங்களை தீர்மானங்களை மேற்கொண்டு, அரச நிறுவனங்களை பாதுகாப்பதாகவும் அரச சேவைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதாகவும் பிரசாரம் செய்ததில் மக்களும் அதற்கு ஏமாந்து வாக்களித்தனர்.

அதன் பிரதிபலனாக 2004 முதல் 2014 காலப்பகுதியில் அரச சேவைக்கு புதிதாக இணைத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 3அறை இலட்சமாக அதிகரித்தது. 

அரச நிறுவனங்களின் நட்டம் கோடிக்கணக்கில் ஏற்பட்ட அந்த காலத்தில் மேலும் புதிய அரச நிறுவனங்களை ஏற்படுத்தி,  ஆளணியையும் அதிகரித்தது. 

அதன் காரணமாக  2020ஆகும் போது அரச நிறுவனங்களின் நட்டம் 1,2 லில்லியன் ருபாவாக அதிகரித்தது. 2003 காலப்பகுதியில் அரச நிறுவனங்களை மறுசீரமைத்திருந்தால் 1,2 ரி்ல்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்காது. நாடு வங்குராேத்து அடைந்திருக்காது.

மேலும் 2020இல் கோத்தாபய ராஜபக்ஷ் வரிச்சலுகை வழங்கி அரச வருமானத்தை இல்லாமலாக்கியது. அதன் காரணமாக  2021 அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரச வருமானத்தில் 58வீதம் ஒதுக்கவேண்டி ஏற்பட்டிருந்தது. 

அதேபோன்று கடன் வட்டிசெலுத்துவதற்கு அரச வருமானத்தில் நூற்றுக்கு 72வீதம் செலுத்தவேண்டி இருந்தது. மொத்தமாக அரச வருமானத்தில் நூற்றுக்கு 130வீதம் கடன் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க ஒதுக்கவேண்டி ஏற்பட்டு்ள்ளது.

அப்படியானால் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்குவதற்கு பணம் இல்லை. அதனால்தான் ஏற்பட்டிருக்கின்றது. 2022, 2023 வருடத்திலும் இந்த பிரச்சினை தொடரும். இதில் இருந்துமீள அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? நாடு எதிர்பார்க்கும் பல விடயங்கள் வரவு செலவு திட்டத்தில் இல்லை.

மேலும் 2022 ஜனவரி வரை நாட்டில் மொத்தமாக  30இலட்சம் பேரே வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தார்கள். ஆனால் அது ஒக்டோபர் ஆகும்போது 96இலட்சம் பேர் வரை அதிகரித்துள்ளது. இந்த பிரிவினருக்கு வரவு செலவு திட்டத்தில் என்ன தீர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று நாட்டை இயக்கும் இயந்திரம் என தெரிவிக்கும் தனியார் துறையினருக்கு எந்த நிவாரணமும் இல்லை. தனியார் துறையில் மொத்தமாக 62இலட்சம் பேர் இருக்கின்றனர்.

ஆனால் தனியார் துறை தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மூடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 20இலட்சம் பேர்வரை தொழிலை இழந்துள்ளனர். என்றாலும் அக்ரகாரா காப்புறுதி திட்டத்தில் தனியார் துறையினரையும் இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதை வரவேற்கின்றோம்.

எனவே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண ஆரம்பமாக நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். இதற்கு அரசாங்கமே ஆரம்பமாக முன்மாதிரியாக செயற்படவேண்டும். 

சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அதனை இந்த அரசாங்கத்தினால் செய்ய முடியாது. பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணை இல்லை. அதனால் தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30