பொட்டு வைத்த முகமோ!

By Ponmalar

22 Nov, 2022 | 12:43 PM
image

*விசாலமான நெற்றி கொண்ட பெண்கள், பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல முகம் அழகு பெறும்.

*நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாக தெரியும்.

*சதுரமான முக வடிவம், வட்டமான முக வடிவம் கொண்டவர்கள், சற்று பெரிய வட்ட வடிவமான பொட்டுக்களை வைக்க வேண்டும்.

*எப்போதும் நெற்றியில் ஒரே இடத்தில் பொட்டு வைத்தால் அந்த இடத்தில் தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். அதனால் பொட்டுக்களை சற்று அங்கும் இங்குமாக மாற்றி வைக்க வேண்டும்.

*சாந்துப் பொட்டுக்களை தேர்ந்தெடுக்கும் போது கையில் வைத்துப் பார்த்து காய்ந்ததும், அது தோலை  இறுக்கமாக பிடிக்காமல் இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும்.

*பொட்டுக்களில் கலக்கப்படும் கலப்பட பொருட்களால் சிலருக்கு தலைவலி, அலர்ஜி, தோல் நோய் ஏற்படும். எனவே, விலை அதிகமென்றாலும் தரமான பொட்டுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right