பசியாறுவது கெட்ட பழக்கமா...!

By Ponmalar

22 Nov, 2022 | 12:25 PM
image

எம்மவர்கள் யாரை சந்தித்தாலும் சுகமா இருக்கீங்களா? பசியாறிட்டீங்களா..? என இரண்டு நல விசாரிப்புகளை தவறாமல் கேட்பார்கள்.

இது ஆரோக்கியமான சமூக கலாச்சார விடயம் என்றாலும், மாற்றம் பெற்று வரும் வாழ்க்கை நடைமுறையில்.., இனி இந்த நல விசாரிப்புகளை கவனத்துடன் கேட்க வேண்டியதிருக்கும் என உணவியல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில் தற்போது சாப்பிடுவது அதாவது பசியாறுவது கெட்ட பழக்கம் என்கிறார்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்வோம்.

இன்றைய திகதியில் நடுத்தர வர்க்க மற்றும் மேல் தட்டு வர்க்க மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியத்திற்காக செலவிடுவது அதிகரித்து வருகிறது.

அதாவது மருத்துவ செலவுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்த பாதிப்பு, கொலஸ்ட்ரோல் எனப்படும் கொழுப்பு நோய், இதய நோய், பக்கவாதம், மூட்டு வலி, மகப்பேறின்மை, தூக்கமின்மை, பல வகையினதான புற்றுநோய் ... என இந்த நோய்களால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படையான மிக முக்கியமான காரணம், அதிக உடல் எடை மற்றும் உடற் பருமன்.

தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை ஐந்து நபர்களில் மூன்று நபர்கள் அவர்களின் சராசரி உடல் எடையை விட கூடுதல் எடையுடனோ அல்லது உடற் பருமனுடனோ இருக்கிறார்கள் என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் கடந்த தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் கூடுதல் உடல் எடை மற்றும் உடற் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம், இரு மடங்கை விட கூடுதலாக உயர்ந்திருக்கிறது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கடந்த தசாப்தங்களில் எம்முடைய இல்லங்களில் இருக்கும் சமையலறை தான், சாப்பாட்டு தயாரிப்பு கூடமாகவும், பசியாறும் இடமாகவும் இருந்தது.

தற்போது அதையும் தனியாரிடம் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறோம். அதாவது வெளியில் சாப்பிடுவது என்பது பெசனாகத் தொடங்கி, தற்போது வாடிக்கையாகி விட்டது.

அதிலும் குறிப்பாக எண்ணெயில் பொரித்த உணவுகளையும், கார்போவைத்ரேட் சத்து கொண்ட உணவுகளையும், இயல்பான அளவைவிட கூடுதலாக விரும்பி சாப்பிடுகிறோம்.

அதே தருணத்தில் நார்சத்து கொண்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக எம்முடைய உடல் எடை இயல்பான அளவைவிட கூடுதலாகியிருக்கிறது.

மேற்கூறிய நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியர்களைச் சந்திக்கும் போது அவர்கள் வலியுறுத்தும் முதன்மையான விடயம், உங்களுடைய உடல் எடையை குறைத்து சீராக பராமரிக்க வேண்டும் என்பதே.

ஆனால் நாம் அதனை கேட்ட சில மணித்தியாலங்களுக்கு பிறகு சௌகரியமாக மறந்து விடுகிறோம். மீண்டும் சுவையுடன் கூடிய பிரியாணி உணவை சுவைக்கத் தொடங்குகிறோம்.

இதனால்தான் மருத்துவர்கள் புகை பிடிப்பது, மது அருந்துவது, போதை மருந்துகளை உட்கொள்வது போன்றவை எப்படி தவறான பழக்கமோ அதே போல் அகால வேலைகளிலும் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுவதும் கெட்ட பழக்கம் தான் என வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

எனவே மருத்துவ செலவுகளை தவிர்க்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் என்றாலும், ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடன் திகழ வேண்டும் என்றாலும், உடல் எடையில் தீவிரமான கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற வகையிலான உடல் எடையை அறிந்து கொண்டு, அதனை சீராக  பராமரிப்பதில் உறுதியான கவனத்தைச் செலுத்துங்கள். 

டாக்டர் குமரன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில்...

2022-11-24 12:23:13
news-image

குழந்தையை கறுப்பாக்குமா இரும்புச் சத்து ?

2022-11-24 11:44:18
news-image

குழந்தைகளின் இதயம்

2022-11-23 16:05:33
news-image

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம்...

2022-11-23 12:12:37
news-image

உடல்நிலை சீராக இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி...

2022-11-23 12:24:33
news-image

ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

2022-11-23 11:10:06
news-image

தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

2022-11-22 17:20:12