இயக்குநரான மாரி செல்வராஜ், 'வாழை' என பெயரிடப்பட்டிருக்கும் சிறார்களுக்கான திரைப்படத்தினைத் தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய இரண்டு படைப்புகளின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் தனித்துவமான கவனத்தை பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மாமன்னன்' எனும் படத்தின் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய குருநாதரை போல் பயணிக்க தொடங்கி இருக்கிறார். நவ்வி ஸ்டுடியோஸ் எனும் பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சொந்தமாக தொடங்கி இருக்கிறார்.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை' எனும் திரைப்படம் தயாராகிறது. இதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக சட்டமன்ற உறுப்பினரும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி வாழ்த்து தெரிவித்தார்.
'வாழை' படத்தில் ஐந்து சிறுவர்கள் கதையின் நாயகர்களாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' பட புகழ் நடிகை பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிறார்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் தொடக்க விழா அன்றே ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் கிராமத்து நிலவியல் பின்னணியும், சிறார்களின் இயல்பான தோற்றமும், யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
'வாழை' திரைப்படம் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அவதானிக்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM