நடிகை பிரியாமணி நடித்திருக்கும் ' Dr 56' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

22 Nov, 2022 | 11:48 AM
image

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'Dr 56' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழ் திரைப்பட இயக்குநர்களான கௌரவ் நாராயணன்,  ராகவன், டான் சாண்டி ஆகியோர் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'Dr 56'. இதில் நடிகை பிரியாமணி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்திருக்கும் பிரவீன் ரெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராகேஷ் சி திலக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நோபின் பால் இசையமைத்திருக்கிறார்.

மருத்துவ துறையில் நடைபெறும் மோசடிகளை மையப்படுத்தி க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஹரிஹரா பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டொக்டர் ஏ. பி. நந்தினி தயாரித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஏ. என். பாலாஜி வெளியிடுகிறார்.

டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கு பற்றி நடிகை பிரியா மணி பேசுகையில், '' பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நேரடியாக நடிக்கும் படம் இது. இந்த கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போது, எம்மை கவர்ந்த அம்சங்கள் இரண்டு இடம்பெற்றிருந்தால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் நான் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறேன்.

அத்துடன் செல்லப் பிராணியான நாய் ஒன்றுடன் நடிக்கிறேன். இந்தப் படத்தில் சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். மருத்துவ துறையில் வல்லாதிக்கம் செலுத்தி வரும் கும்பலை பற்றிய கதை. ஏராளமான உண்மை சம்பவங்களை தழுவி திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் 'Dr 56' பிடிக்கும்'' என்றார்.

படத்தின் தலைப்புக்குறித்து நாயகன் பிரவீன் ரெட்டி விளக்கமளிக்கையில், '' படத்தில் நாயகனுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒவ்வொரு 56 நிமிடத்திற்கு ஒரு முறை மாத்திரை ஒன்றை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவனால் உயிர் வாழ முடியும். இந்த நிலை அவனுக்கு ஏற்பட்டது எப்படி? என்பதை விவரிப்பதுதான் இப்படத்தின் திரைக்கதை'' என்றார்.

மருத்துவ துறையில் நடைபெற்று வரும் மோசடிகளை தோலுரித்துக் காட்டும் படைப்பு என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சபரி’...

2022-12-09 11:40:19
news-image

நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

2022-12-09 11:39:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-12-09 11:36:08
news-image

ஹிப் ஹொப் ஆதி தமிழாவின் ஜோடியாக...

2022-12-09 11:21:41
news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53