30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன் பிடிக்கப்பட்டது

By Sethu

22 Nov, 2022 | 11:35 AM
image

பிரான்ஸிலுள்ள ஏரியொன்றில் சுமார் 30 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள கோல்ட்பிஷ் இன மீனொன்று பிடிக்கப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிகப் பெரிய கோல்ட்பிஷ் மீனாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிரான்ஸின் சம்பெய்ன் நகரிலுள்ள புளூவோட்டர்ஸ் ஏரியில் அண்மையில் இந்த மீன் பிடிக்கப்பட்டது.

42 வயதான அண்டி ஹக்கெட் என்பவர் இந்த மீனைப் பிடித்துள்ளார். இவர் பிரித்தானியர் ஆவார்.

இந்த மீனுடன் புகைப்படங்களைப் பிடித்துக் கொண்ட அண்டி ஹக்கெட் பின்னர் அதை மீண்டும் ஏரியில் விடுவித்தார்.

புளூவோட்டர்ஸ் ஏரியில் ஒரு பெரிய கோல்ட் பிஷ் இருப்பதை ஏற்கெனவே பலர் அறிந்திருந்தனர்.இந்த மீனுக்கு 'கரட்' என பெயரிடப்பட்டிருந்தது. 

இந்த மீன் இனம் 20  வருடங்களுக்கு முன்னர் இந்த ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

'இந்த மீன் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. ஆனால், அது அடிக்கடி வெளியில் வருவதில்லை' என அண்டி ஹக்கெட் கூறியுள்ளார்.

'இங்கு "கரட்" இருப்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால். அதை நான் பிடிப்பேன் என ஒருபோதும் எண்ணயிருக்கவில்லை' எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த மீனின் எடை அளவிடப்பட்டபோது அது 30.6 கிலோகிராம் எடையுடையதாக இருந்தது. இதற்கு முன்னர் மிகப் பெரிய கோல்ட்பிஷ் அமெரிக்காவில் பிடிக்கப்பட்டிருந்தது. 2019 ஆம் அண்டு மினசோட்டா மாநிலத்திலுள்ள ஏரியொன்றில் ஜேசன் ஃபுகேட் என்பவர் பிடித்த அந்த மீன் 17 கிலோகிராம் எடையுடையதாக இருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12
news-image

30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன்...

2022-11-22 11:35:44
news-image

7,800,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து...

2022-11-21 12:05:08
news-image

சக்கரக்கதிரையின் சக்கரங்களில் ஒளித்து போதைப்பொருளை கடத்த...

2022-11-17 16:05:32
news-image

உலகின் 800 ஆவது கோடி குழந்தை...

2022-11-17 12:54:03
news-image

ஸ்டீவ் ஜொப்ஸின் பழைய பாதணி 8...

2022-11-16 11:34:57
news-image

மிக நீளமான மூக்கு கொண்ட மனிதர்

2022-11-15 17:44:46
news-image

மாணவிகளுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை! உகண்டா...

2022-11-15 15:21:42
news-image

செவிப்புலன் குறைவதாக கூறிய நபரின் காதுக்குள் ...

2022-11-15 12:18:24