கபடி போட்டியை மையப்படுத்திய 'பட்டத்து அரசன்'

Published By: Digital Desk 5

22 Nov, 2022 | 11:36 AM
image

''நான் எந்த திரைப்படங்களையும் பார்த்து கொப்பி அடிப்பதில்லை. மண்ணின் மைந்தர்களை பற்றியும், நான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும் கதைகளை எடுத்து படமெடுக்கிறேன்'' என 'பட்டத்து அரசன்' படத்தின் இயக்குநரான ஏ. சற்குணம் தெரிவித்திருக்கிறார்.

ராஜ்கிரண் - அதர்வா கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த இரு நட்சத்திரங்களுடன் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், ஆர். கே. சுரேஷ், சிங்கம்புலி, துரை சுதாகர், பால சரவணன், ராஜ் ஐயப்பன், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 'களவாணி", 'வாகை சூடவா', 'நையாண்டி', 'சண்டி வீரன்', 'களவாணி 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏ. சற்குணம் 'பட்டத்து அரசன்' படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.

தமிழர்களின் கலாச்சாரத்தையும், வீர விளையாட்டான கபடி விளையாட்டை மையப்படுத்தியும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இம்மாதம் 25 ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு குடும்பத்திற்கும், ஒரு ஊருக்கும் இடையே நடைபெறும் கபடி போட்டி தான் 'பட்டத்து அரசன்' படத்தின் கதை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி, இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

தார பங்கு என்று தமிழர்களிடத்தில் குறிப்பாக தஞ்சை தரணியில் சொத்து பிரிவினையின் போது ஒரு விவகாரம் முன் வைக்கப்படும். அதனை தழுவியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. முதன் முதலாக ராஜ்கிரண் மூன்றுவித தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு வியக்கத்தக்கது. அதர்வாவும், புதுமுகம் ஆஷிகா ரங்கநாத்தின் இளமை குறும்புடன் கூடிய காதல், ரசிகர்களை கவரும். குடும்பத்துடன் அனைவரும் காண வேண்டிய படைப்பாக 'பட்டத்து அரசன்' தயாராகி இருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37