நுவரெலியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

By T. Saranya

22 Nov, 2022 | 11:56 AM
image

இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை 03.00 மணி முதல் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

நுவரெலியா தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும்  நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெலிமடை,கதிர்காமம்,பதுளை,எல்ல,பண்டாரவளை போன்ற  தூர பிரதேசங்களில்  இருந்து இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ்கள் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்குள்  உள்ளே  நிறுத்தப்படாமல் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பஸ்  நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இலங்கை போக்குவரத்து சபையின் சொந்தமான பஸ்கள் பிரதான பஸ் நிலையத்துக்குள் உட்செல்ல கூடாது எனவும் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில்  இயக்கப்படும் அரச பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக நுவரெலியாவில் இருந்து இயக்கப்படும் அரச பஸ் நுவரெலியா - உடபுசல்லாவ பிரதான வீதியில் அமைந்துள்ள நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபையின் காரியாலயத்துக்கு (SLTB NUWARA ELIYA DEPOT)  அருகில் கடமைக்கு செல்லாது அரச பஸ்கள் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

தமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தரும் வரை இப்பணிபகிஸ்கரிப்பு தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இப் பணிபகிஸ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் பெரும் மற்றும் மாதாந்த அரச பஸ் பருவச் சீட்டினை பெற்றுக்கொண்டவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர்...

2023-01-28 12:38:19
news-image

யாழில் தாய்ப் பால் புரைக்கேறி 30...

2023-01-28 12:43:32
news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:13:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02