கேகாலை அவிசாவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வர­வு­செ­லவுத் திட்ட மும்­மொ­ழி­வுகள் மூலம் வாகன சார­தி­க­ளுக்கும் வாக­னங்­க­ளுக்­குமான 25 ஆயிரம் ரூபா தண்­டப்­பணம் மற்றும் வரிகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து தனியார் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 28 தொழிற் சங்கங்கள் நேற்றிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை சேவையில் ஈடுபட்டுள்ள சில தனியார் பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக நீர்கொழும்பு நோக்கி கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, கேகாலை மற்றும் அவிசாவளை பகுதிகளில் பயணித்த தனியார் பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான 20 பஸ்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.