மீன் குழம்பு

Published By: Ponmalar

22 Nov, 2022 | 11:03 AM
image

தேவையான பொருட்கள்: 

மீன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தேங்காய் - 2 ஸ்பூன்

சீரகம் - 1/4 ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 1/2 கப் (கெட்டியாக)

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 1/4 கப்

புளி - நெல்லி அளவு

மிளகாய்தூள் - 2 ஸ்பூன்.

செய்முறை: 

மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். 

தேங்காய், சீரகம், வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

மண்சட்டி அல்லது வாணலியில் புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 

பின்னர் அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மிளகாய்தூள், எண்ணெய், மீன் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 

குழம்பு நன்கு கொதித்ததும் சிறு தீயில் வைத்து மீன் வெந்து எண்ணெய் பிரியவும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்த பின் அடுப்பை அணைத்து விடவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்