கரும்பின் மருத்துவ குணங்கள்

By Ponmalar

22 Nov, 2022 | 10:51 AM
image

* கரும்பின் சாறில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாகும்.

* கல்லீரல் நன்றாக செயல்படவும், செரிமானம் நன்றாக நடைபெறவும் கரும்பு பெரிதும் உதவுகிறது.

* கரும்பில் உள்ள பொலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக் கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

* கரும்பை உண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்துள்ளதால், வேலை ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும்.

* கரும்பில் உள்ள கல்சியம் மற்றும் மக்னீசியம் எலும்பு மற்றும் பற்களை வலிமையாக்கும்.

* பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

* ஆன்டி ஆக்ஸிடண்டீஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ், புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.

* கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

* கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

* கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.

* உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி சமநிலைப்படுத்துகிறது.

* உடல் சூட்டைக் குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை சீராக்குகிறது.

* உடலில் உள்ள நச்சுக்களையும், மாசுகளையும் நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

* கரும்பு சாற்றில் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நோய் குறையும்.

* தேங்காய்ப்பாலுடன் கரும்புச் சாறு சேர்த்துப் பருக சீதபேதி குறையும்.

* கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில்...

2022-11-24 12:23:13
news-image

குழந்தையை கறுப்பாக்குமா இரும்புச் சத்து ?

2022-11-24 11:44:18
news-image

குழந்தைகளின் இதயம்

2022-11-23 16:05:33
news-image

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம்...

2022-11-23 12:12:37
news-image

உடல்நிலை சீராக இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி...

2022-11-23 12:24:33
news-image

ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

2022-11-23 11:10:06
news-image

தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

2022-11-22 17:20:12