(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையில் பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால் அது ஸ்தீரமற்ற பாராளுமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு காரணமாக அமைவதுடன் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவ.21) இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த யாரும் முன்வராத நிலையில், அந்த சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டு அச்சமின்றி நாட்டை பொறுப்பேற்றார்.
இந்நிலையில் மக்கள் எந்த வழியிலாவது நாட்டை முன்னேற்றவே முயற்சிக்க வேண்டும். எந்த பேயுடன் சேர்ந்தாவது, பேயிடம் வேலை வாங்கியாவது பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
என்றாலும் இந்த நேரத்தில் பிரபலமான விடயங்களை கூறி ஆட்சியை பிடிக்கவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் நாட்டுக்காக சரியான பாதையை தெரிவு செய்து போகின்றோம்.
நாட்டின் இருப்பு மற்றும் மக்களின் இருப்பு தொடர்பிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
ரோம் பற்றியெறிகையில் மன்னன் பிடில் வாசித்ததை போன்று எதிர்க்கட்சியினர் இன்று செயற்படுகின்றனர். அவர்கள் தேர்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். அதன்மூலம் பிரச்சினைகள் தீரப் போவதில்லை.
நாங்கள் இந்த நேரத்தில் நாடு தொடர்பில் சிந்தித்தே செயற்பட வேண்டும். ஏனெனில் நாடு தற்போதுள்ள நிலையில் தேர்தலுக்கு சென்றால், அது ஸ்திரமற்ற பாராளுமன்றத்தையே ஏற்படுத்தும்.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாத நிலையே ஏற்படும். அதனால் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதிக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM