ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியை பயன்படுத்தினார் எனினும் அவர் அதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்வரவேற்புடன் விமானநிலையத்தின் மிக முக்கிய பகுதியை வந்தடைந்த முன்னாள் நிதியமைச்சர் மிக முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியை பயன்படுத்தியமைக்கான தன்னை வரவேற்க வந்தவர்களின் உணவு போன்றவற்றிற்கான கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை.
பசில் ராஜபக்ச அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்காததால் அவர் முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியை பயன்படுத்த முடியாது.
பசில் ராஜபக்சவின் வருகைக்காக கூடியவர்களிற்கு தாங்கள் உணவுவழங்கியதாகவும் அதற்கான கட்டணம் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கன்எயர்லைன்சின் கேட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது.
பசில் விமானநிலையத்தில் உள்ள கோல்ட்ரூட் சேவையை பயன்படுத்தியுள்ளார் – முக்கியபிரமுகர்களிற்கான சேவையை பயன்படுத்தவேண்டும் என்றால் அதற்கான கட்டணம் நபர் ஒருவருக்கு 200அமெரிக்க டொலர்.
அந்த பிரிவில் இரண்டு அறைகள் காணப்பட்டன சுமார் 100 பேர் அனேகமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டிருந்தனர் முக்கிய பிரமுகர்களிற்கான வாகனதரிப்பிடமும் பயன்படுத்தப்பட்டது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பசில் ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியை பயன்படுத்தியுள்ளனர் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை அதனை யார் செலுத்துவார்கள் என்பதற்கான பதிலும் இல்லை என கொழும்பு விமானநிலைய வட்;டாரங்கள் தெரிவித்தன.
டெய்லி மிரர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM