இங்கிலாந்தின் இளம் வீரர்கள் அபாரம் : மூக்கில் காயமடைந்த ஈரான் கோல்காப்பாளர் ஒய்வு

22 Nov, 2022 | 06:21 AM
image

(நெவில் அன்தனி)

ஈரானுக்கு எதிராக தோஹா கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு பி போட்டியில் இளம் வீரர்களான புக்காயா சக்கா, ஜூட் பெலிங்ஹாம் ஆகியோர் போட்ட கோல்களினால் உற்சாகம் அடைந்த இங்கிலாந்து 6 - 2 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றியீட்டி உலகக் கிண்ண வெற்றிக் கணக்கை ஆரம்பித்தது.

போட்டியின் 8ஆவது நிமிடத்தல் ஈரானின் முதல் நிலை கோல்காப்பாளரின் மூக்கில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டி வெகுநேரம் தடைப்பட்டது. ஹெரி கேனின் ப்றீ கீக் பந்தை நோக்கி உயரே தாவிய ஈரான் கோல்காப்பாளர் அலிரீஸா பெய்ரான்வெண்ட் தனது சக வீரர் ஒருவருடன் மோதுண்டதால் காயமடைந்தார்.

அவருக்கு நீண்ட நேரம் சிகிச்கை அளிக்கப்பட்ட பின்னர் இரத்தக் கறை படிந்த ஜேர்சியை மாற்றிக்கொண்டு மீண்டும் விளையாடினார். ஆனால் சற்று நேரத்தில் நிலைக்குலைந்து சரிந்த அவரை உடனடியாக ஸ்ட்ரெச்சரில் கிடத்தி மருத்துவ உதவியாளர்கள் அரங்கைவிட்டு தூக்கிச் சென்றனர்.

அவருக்கு பதிலாக ஹொசெய்ன் ஹொசெய்னி 18ஆவது நிமிடத்தில் மாற்று கோல்காப்பாளராக அணியில் இணைந்தார்.

முதல் நிலை கோல்காப்பாளர் அலிரீஸா பெய்ரான்வெண்ட் காயமடைந்தது ஈரானுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈரானைவிட அதிக நேரம் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து போட்டியின் 35ஆவது நிமிடத்தில் 19 வயதுடைய ஜூட் பெலிங்ஹாம் மூலம் முதலாவது கோலைப் போட்டது. லூக் ஷா பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய பெலிங்ஹாம் தலையால் முட்டி கோல் போட்டார். இது அவரது முதலாவது சர்வதேச கோலாகும்.

இதனை அடுத்து இங்கிலாந்தின் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இடைவேளைக்கு 2 நிமிடங்கள் இருந்தபோது இங்கிலாந்துக்கு கிடைத்த கோர்ணர் கிக் பந்தை ஹெரி மெகயர் தலையால் முட்டி புக்காயா சாக்காவுக்கு பரிமாறினார். சாக்கா வெகமாக செயற்பட்டு   பந்தை கோலினுள் புகுத்தி இங்கிலாந்தை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

முதலாவது ஆட்டநேர பகுதியின் உபாதையீடு நேரத்தில் ஜுட் பெலிங்ஹாம் பரிமாறிய பந்தை முன்னோக்கி நகர்த்திய அணித் தலைவர் ஹெரி கேன், சாதுரியமாக  கோல் வாயிலை நோக்கி நகர்த்தினார். அதே நேரம் வேகமாக செயற்பட்ட ரஹீம் ஸ்டேர்லிங் மிகவும் இலாவகமாக இங்கிலாந்தின் 3ஆவது கோலை போட்டார்.

ஈரான் கோல் காப்பாளர் அலிரீஸா காயமடைந்ததால் தடைப் பட்ட நேரம் உட்பட ஏனைய உபாதைகளுக்காக நிறுத்தப்பட்ட நேரத்திற்கு ஈடாக உபாதையீடு நேரம் 14 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இடைவேளையின் பின்னர் 62ஆவது நிமிடத்தில் வலப்புறமாக பந்தை நகர்த்திச் சென்ற ரஹீம் ஸ்டேர்லிங், கோல் வாயிலில் இருந்த புக்காயா சக்காவுக்கு பந்தை பரிமாற அவர் எவ்வித சிரமமும் இன்றி பந்தை கோலினுள் புகுத்த இங்கிலாந்து 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது.

மூன்று நிமிடங்கள் கழித்து ஈரான் வீரர் மெஹ்தி தரேமி ஓங்கி உதைத்த பந்து கோல்காப்பின் குறுக்குக் கம்பத்தின் அடியில் உராய்தவாறு கோலினுள் புகுந்தது. (ஈரான் 1 - இங்கிலாந்து 4)

போட்டியின் 71ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் நுழைந்த மார்க்கஸ் ரஷ்போர்ட் அடுத்த நிமிடமே அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கையை 5ஆக உயர்த்தினார்.

போட்டியின் 89ஆவது நிமிடத்தில் கெலம் வில்சன் வலது புறத்திலிருந்து பரிமாறிய பந்தை மற்றொரு மாற்று விரரான ஜெக் கிரேலிஷ் கோலினுள் புகுத்தி இங்கிலாந்தின் கோல் எண்ணிக்கை 6ஆக உயர் ந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் உபாதையீடு நேரம் 12 நிமிடங்கள் வழங்கப்படடது. இதனிடையே உபாதையீடு நேரத்தின் 11ஆவது நிமிடத்தில் ஈரானுக்கு கிடைத்த பெனல்டியை மெஹ்தி தரேமி கோலாக்கினார்.

எனினும் 6 - 2 என்ற இறுதி கோல் எண்ணிக்கையானது அப் போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியிருந்ததை எடுத்துக்காட்டியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் சிட்டி எவ்.ஏ. கிண்ண சம்பியனானது!

2023-06-04 17:17:41
news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26