வவுனியாவில் கடமை புரியும் இராணுவ மருத்துவப் பிரிவு தாதி மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு!

Published By: Vishnu

21 Nov, 2022 | 06:01 PM
image

கட்டுகஸ்தோட்டை, தொடம்வல பாலத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இராணுவ மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தாதி ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் 36 வயதுடைய வவுனியாவில் உள்ள இராணுவ மருத்துவப் பிரிவின் இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது சடலம் கடந்த 19 ஆம் திகதி மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இன்று (21) கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு மரணத்துக்கான  சரியான காரணத்தை கண்டறிய முடியாததனால்  சடலத்தின் பாகங்களை பேராதனை பல்கலைக்கழகத்துக்கு  அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக சம்பத் மேற்கொண்டு வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26
news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50