விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும் காகில்ஸ் 'சருபிம'

By Digital Desk 2

21 Nov, 2022 | 09:14 PM
image

காகில்ஸ், தனது பரந்தகன்ற விவசாய முகவர் வலையமைப்பு மற்றும் நிலைபேறான சந்தைகளை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முதலீடுகள் என்பவற்றோடு, நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளை முன்னேற்றியுள்ளது. 

விவசாயிகளிடமிருந்து விளைச்சலை நேரடியாக பெறுவதற்கான சேகரிப்பு நிலையங்களில் முதலீடு செய்தல், மற்றும் குளிரூட்பட்ட வண்டிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இடம்மாற்றல் என்பவற்றின் துணையோடு காகில்ஸ் விவசாய பெறுமதி சங்கிலியானது நாட்டின் வெற்றிகரமான ஒன்றான தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

இதன் சில முக்கிய சாதனைகளாக பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்குப் பிந்தைய விரயத்தைக் குறைத்தமை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிகுறைந்த விலையையும், அதேவேளை விவசாயிகளுக்கு அதியுயர் விலையையும் உறுதி செய்வதற்காக விநியோக சங்கிலியிலிருந்து இடைத் தரகர்களை நீக்கியமை என்பவற்றைக் குறிப்பிடலாம். பால் மற்றும் விவசாய உற்பத்திகளை உத்தரவாதமான விலையில் வாங்குவதற்கு மேலதிகமாக விவசாயிகளது உற்பத்தியின் செயற்திறன், தரம் மற்றும் பேண்தகவையும் காகில்ஸ் விருத்தி செய்துள்ளது.

அதன் மூலமாக கிராமிய வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதோடு மரபு ரீதியான விவசாயிகளை விவசாய தொழில் முயற்சியாளர்களாக உருமாற்றியுள்ளது.

2008 இல், தனமில்வில என்ற இடத்தில் விவசாயிகளுக்கான அறக்கட்டளை ஒன்றை காகில்ஸ் ஆரம்பித்தது. இதில் தரம் 5, சாதாரண தரம் மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியை வெளிப்படுத்தும் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்விசார் புலமைப்பரிசில் ஒன்றைப் பெற்றுத்தருவதற்காக விவசாயிகளிடமிருந்து பெறும் காய்கறி, பழங்களின் ஒவ்வொரு கிலோகிராமுக்கும் 50 சதம் வீதம் பங்களிப்பு செய்யப்படுகின்றது.

இந்த பங்களிப்பு இன்று வரை தொடர்கிறது. அதற்கு மேலதிகமாக நிதியின் ஒரு பகுதியானது சமூக அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றது. இவற்றில் பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுத்தரல் மற்றும் கிராமிய பாடசாலைகளிலுள்ள சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வருடம், காகில்ஸ் சருபிம அறக்கட ;டளையானது கல்விசார் செயற்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய சிறுவர்களுக்கு ரூ.25 மில்லியன் பெறுமதியான 774 புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது. இவற்றை பெறுபவர்களில் தரம் 5 ஐ சேர்ந்த 194 மாணவர்கள், உயர் தரத்தை சேர்ந்த 375 பேர், 158 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்கற்கை மாணவர்கள் 47 பேர் உள்ளடங்குவர். இவற்றுக்கு மேலதிகமாக 32 சமூக அபிவிருத்தி செயற்திட்டங்களையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதோடு, அவற்றில் விவசாயிகளுக்கான சுகாதார முகாம்கள் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் நீர் விநியோகம் மற்றும் கழிவகற்றல் வசதி செயற்திட்டங்கள் என்பன அடங்கும். 

இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, 2,500 க்கு அதிகமான புலமைப் பரிசில்கள் விவசாயிகளின் பிள்ளைகளுக்குப் பெற்றுத்தரப்பட்டிருப்பதோடு தண்ணீர் சுத்திகரிப்பு செயற்திட்டங்கள், பாடசாலை நூலகங்கள், கிராமப்புற பாடசாலைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் உட்பட 100 க்கு மேற்பட்ட சமூகநல செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2014 இல், சருபிம அறக்கட்டளையானது அனைத்து காகில்ஸ் காய்கறி, பழங்கள், மற்றும் பால் சேகரிப்பு நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டதோடு அதனால் நாடெங்குமுள்ள 20,000 க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பாற் பண்ணையாளர்கள் பயனடைந்தனர். 

2018 இல், தனது விவசாய நவீனமயப்படுத்தல் செயற்திட்டத்தோடு தேசிய விவசாய அபிவிருத்தியை நோக்கி சருபிம அடியெடுத்து வைத்தது. இந்த செயற்திட்டமானது காலநிலையை கருத்திற்கொண்ட, இலாபகரமான, மற்றும் சூழலுக்கு இசைவான பலதரப்பட்ட புயுP தரச்சான்று கொண்டு காய்கறி, பழங்களின் உற்பத்திக்கு ஒரு மாதிரி வடிவமாக அமைந்தது.

“சருபிம” ஆனது கிராமப்புற விவசாயிகள் மற்றும் பாற் பண்ணையாளர்களுக்கு நிலைபேறான சந்தைகளை உருவாக்குதல், கொள்ளளவை அதிகரித்தல், மற்றும் அடுத்த தலைமுறை விவசாயிகளை வளர்த்தெடுத்தல் என்பவற்றின் மூலமாக அவர்களை ஊக்குவிப்பதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். 

வளமும் உரமும் அற்ற மண்ணிலிருந்து நல்ல விளைச்சலைப் பெற முடியாது. அவ்வாறே, நிலைபேறான விவசாயத்திற்கு விவசாயிகள் மண்ணைப் பராமரித்தல் வேண்டும், வளமூட்ட வேண்டும், அத்துடன் எதிர்கால தலைமுறைக்காக பேணிப் பாதுகாக்க வேண்டும்.

- சருபிம

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்மையான மற்றும் மகிழ்வூட்டும் சருமத்திற்கு வெல்வெட்...

2022-12-07 12:44:34
news-image

Elegance, Excelsior ஆகிய இரு விசேட...

2022-12-05 14:38:29
news-image

60 ஆவது ஆண்டில் Vogue Jewellers

2022-12-02 17:28:58
news-image

MARLBO வருட இறுதி மலிவு விற்பனை

2022-11-28 17:14:01
news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40
news-image

 ‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய...

2022-11-11 09:45:26